திருப்பூர்: திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக வீரபாண்டி அடுத்த பழவஞ்சிபாளையம், காலனி பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
இந்த பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அதில் ஏராளமான குழந்தைகள், முதியோர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் எதிரொலியாக முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியிருப்பதால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகப்பட்டுள்ளனர்.
குட்டையில் கட்டப்பட்டதா காவல் நிலையம்? இது குறித்து சாலை மறியலில் இறங்குய மக்கள், “இந்த பகுதியின் வீடுகளுக்கு அருகே உள்ள குட்டை பகுதியில் புதிதாக வீரபாண்டி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக இந்த குட்டைப் பகுதியில் மண் கொட்டி மேடுபடுத்தி உள்ளனர். இதனால் குட்டையில் உள்ள தண்ணீர் வீடுகளுக்குள் வரும் நிலை உருவாகி உள்ளது” என்றனர்
இதையும் படிங்க: குளம் போல் மாறிய குடியிருப்பு! வீடுகளை காலி செய்யும் மக்கள்..
வீடு திண்ணிக்குள் போயிரும் போல, நடவடிக்கை எடுங்க: இந்நிலையில் மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் எப்பொழுது வேண்டுமானாலும் வீட்டிற்குள் தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே இது குறித்து அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் பல்லிடம் திருப்பூர் பிரதான சாலையான வீரபாண்டி சிக்னல் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டம்: இதன் காரணமாக சுமார் 15 நிமிடங்களுக்குப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உயர் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி மேயர், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் குடியிருப்பு பகுதிக்குள் வந்து ஆய்வு செய்தனர். மேலும் இது குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.