திருப்பத்தூர்: நடிகர் ரஜினிகாந்த நேற்று முன்தினம் (செப். 30) இரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டார். இது ரஜினிகாந்த எடுத்து கொள்ளும் வழக்கமான மருத்துவ பரிசோதனை என ரசிகர்கள் என்று நினைத்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், ''மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் ரஜினிகாந்த விரைந்து நலம் பெற விரும்புகிறேன்'' எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: இன்னும் 150 நாட்கள் தான்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் சூசகம்!
மேலும் அவரைத் தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டுமென்று தங்களது X தலத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினி காந்த் விரைவில் குணமடைய வேண்டி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு பகுதியில் உள்ள முனீஸ்வரர் ஆலயத்தில், ரஜினி பாஸ்கர் தலைமையிலான ரஜினி ரசிகர்கள், ரஜினி புகைப்படத்தை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். மேலும் அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் 51 தேங்காய்களை உடைத்து, பிராத்தனையில் ஈடுப்பட்டனர். இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான ரஜினி ரசிகர் பங்கேற்றனர்.
இதில் பேசிய ரஜினி பாஸ்கர், “ரஜினி வேட்டையன் இசை வெளியிட்டு விழாவில் கூறிய குதிரைக்கான அர்த்தம் இப்போது தான் எங்களுக்கு உதிக்கிறது. அவர் கூறிய குதிரையை வாகனமாக கொண்ட கடவுள் முனீஸ்வரர்தான் எனவே அவர் விரைவில் குணமடைய கோரி எங்களின் பிரார்த்தனையை அந்த கடவுள் முன் வைத்துள்ளோம்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்