ETV Bharat / state

"ஊராட்சிக் குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே" - திருப்பத்தூர் திமுக நிர்வாகி முகநூல் பதிவால் பரபரப்பு! - திமுக நிர்வாகி

Tirupathur DMK member FB post: மாதனூர் ஒன்றியக் குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே என முகநூலில் பதிவு செய்த திமுக ஒன்றியக் குழு உறுப்பினரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் திமுக கட்சி நிர்வாகி முகநூல் பதிவால் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 4:15 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் திருக்குமரன். திமுக கட்சியைச் சேர்ந்த இவர், பெரியவரிகம் 6 ஆவது திமுக மாதனூர் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், இவர் தனது முகநூலில் "திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களை கருணை கொலை செய்து விடலாமே! மக்கள் பணி செய்ய முடியாமல் தவிப்பு?" என பதிவு செய்துள்ள நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் திருக்குமரனிடம் கேட்டபோது, “நான் 6வது வார்டு பெரியவரிகம், மாதனூர் ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளேன். மாதனூர் ஒன்றியக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன் ஆகியோர் மாதனூர் ஒன்றியத்தில் உள்ள ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு எந்த ஒரு வேலையும் கொடுக்கவில்லை.

டெண்டரும் முறைப்படி இல்லை, ஒன்றியக் குழு கூட்டமும் சரியாக வைப்பது இல்லை. கவுன்சிலர்களையும் யாரும் மதிப்பது இல்லை. மனம் வெறுத்து போய் பதிவு செய்தேன். மேலும், இந்த மூன்று வருடத்தில் பெரிய வரிகத்தில் ஒரு சில வேலைகள் மட்டுமே செய்துவிட்டு, மற்ற வேலைகளை ஒன்றியத் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு தெரியாமலேயே செய்து விடுகிறார். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளேன். 15 லட்சம் ரூபாய் செலவு செய்து மனம் வெறுத்து உள்ளேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மருத்துவர்கள் கலந்தாய்வு - 1,021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.