ETV Bharat / state

ஆம்பூரில் முதியவர் கொலை; வடமாநில இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு! - Old man murder in Tirupathur

Tirupattur District Court: ஆம்பூரில் வடமாநில முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் வடமாநில இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

tirupattur-district-court-sentenced-youth-to-life-imprisonment-in-case-of-murder-of-an-old-man
ஆம்பூரில் முதியவர் கொலை வழக்கில், வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 5:20 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் ரெட்டித்தோப்பைச் சேர்ந்த ரபீக் அஹமதுக்குச் சொந்தமான துண்டு தோல் குடோன், ஆம்பூர் உமர் ரோட்டில் உள்ளது. இந்த குடோனில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராம்ஜிலால் (68) மற்றும் குலீப்சிங் (27) ஆகிய 2 பேரும் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இவர்கள் வேலை முடிந்ததும் குடோனிலேயே தங்கிவிடுவது வழக்கம். மேலும், இந்த குடோனில் ரபீக் அஹமதுவின் உறவினர் சுஹேல் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திச் செல்வதும் வழக்கம். இந்த நிலையில், கடந்த 2018 மார்ச் 4ஆம் தேதி அன்று, சுஹேல் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்த வந்துள்ளார்.

அப்போது, மதுபோதையில் இருந்த குலீப் சிங், சுஹேலுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதனால், ராம்ஜிலால் விலக்கி விட வந்துள்ளார். இதையடுத்து, குல்தீப் சிங் எனக்கு ஆதரவாக இல்லாமல் சுஹேலுக்கு எப்படி ஆதரவு தெரிவிக்கலாம் எனக்கூறி, குடோனில் இருந்த குக்கர் மூடியை எடுத்து ராம்ஜிலாலைத் தாக்கி உள்ளார்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், அங்கேயே மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோது ராம்ஜிலால் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குலீப் சிங்கை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடைசி விசாரணை கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனா குமாரி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், குற்றம் சாட்டப்பட்ட குலீப் சிங்கிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பி.டி.சரவணன் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் வருமா? அஸ்ட்ராஜெனகா நிறுவனம் கூறுவது என்ன? - Covishield Vaccine Side Effects

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.