ETV Bharat / state

கடந்த ஆண்டு பெய்த மழையில் தரைமட்டமான வீடு! “இன்று வரை நிவாரணம் இல்லை” தச்சநல்லூர் பகுதி மக்கள் வேதனை! - THACHANALLUR FLOOD RELIEF

திருநெல்வேலியில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் தச்சநல்லூர் பகுதியில் பல வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் இன்றும் நிவாரணம் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு வெள்ளத்தில் இடிந்த வீடு, மனு அளித்த மக்கள்
கடந்த ஆண்டு வெள்ளத்தில் இடிந்த வீடு, மனு அளித்த மக்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் மாரிமுத்து - உலகம்மாள் தம்பதி மற்றும் இசக்கிமுத்து - புது மாடத்தி தம்பதியும் மாநகராட்சி மேயரிடம் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி மனு அளிக்க வந்தனர். அவர்களது மனுவில், “திருநெல்வேலி தச்சநல்லூர் உலகம்மன் கோயில் தெருவில் வசிக்கும் நாங்கள் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டோம். எங்கள் வீடுகள் முழுவதுமாக இடிந்த நிலையில் தற்போது வரை அரசு அதற்கான நிவாரணம் தரவில்லை என தெரிவித்திருந்தனர்.

மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருநெல்வேலியில் பெய்த தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் இடைவிடாது கொட்டித் தீர்த்ததால், அணைகளில் அளவுக்கு அதிகமான நிலையில் தண்ணீர் திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மனு அளித்த மக்கள் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் ஒட்டுமொத்தமாக சுமார் 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடியதால், ஆற்று கரையோரம் வசிக்கும் மக்களின் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அதில் மாநகரில் டவுன் வண்ணாரப்பேட்டை, சிந்துபூந்துறை, தச்சநல்லூர் போன்ற பகுதியில் பல வீடுகள் இடிந்து விழுந்தன.

இதற்கு அரசு சார்பில் அப்போது நிவாரண பணிகள் மும்மரமாக நடைபெற்றது. வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6,000 பொது நிவாரணமாக வழங்கப்பட்டது. இது தவிர வீடு முழுமையாக இடிந்திருந்தால் மீண்டும் வீடு கட்ட உரிமையாளர்களுக்கு 4 லட்சம் ரூபாயும் பகுதியாக வீடு இடிந்திருந்தால் ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் இதற்கான கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு ஆண்டாகியும் எங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த மனு குறித்து அப்பகுதி மக்களை நேரில் சென்று ஈடிவி பாரத் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து, “கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி அன்று நள்ளிரவு, திருநெல்வேலியில் பெய்த கனமழையால் மாநகரில் திடீரென நள்ளிரவில் குபுகுபுவன எங்கள் வீட்டை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும், தண்ணீரில் எங்களது வீடு இடிந்து தரைமட்டமாகியது.

இதையும் படிங்க: நெல்லையை புரட்டிப்போட்ட மழை; தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு.. கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை! - TIRUNELVELI RAIN

இதற்கு, அரசு நிவாரணம் வழங்கும் என்ற அறிவித்திருந்தனர். இது குறித்து, பல முறை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் நேரில் வந்து கணக்கெடுத்து விட்டு சென்றுள்ளனர். எனவே, நிவாரணம் கிடைக்கும், எப்படியும் மீண்டும் அதே இடத்தில் வீட்டை கட்டி விடலாம் என நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் அருந்ததியினர் எங்களுக்கு அப்போது நிவாரண உதவிகளை செய்தது தேவாலயத்தில் இருப்பவர்கள் தான்.

எங்களுக்கு பெரிய வீடுக்கூட வேண்டாம். சமைக்க, படுத்து ஓய்வெடுக்க என சிறிய வீடு போதும். எங்களது சொந்த வீடுகள் தரைமட்டமாக உள்ள நிலையில் வாடகைக்கு குடியிருந்து வருகிறோம். இந்த துயரத்தை தீர்ப்பது அரசின் கையில்தான் உள்ளது. ஏற்கனவே, சென்ற ஆண்டு வந்த மழையின் தாக்குதலை எங்களால் எதிர்க்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டும் மிகுந்த மழை பெய்து வரும் சூழல் அச்சத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.

இதையடுத்து, பேசிய அப்பகுதியை சேர்ந்த புது மாடத்தி, “அரசு அனைத்து பகுதிகளும் நிவாரணம் கொடுத்தார்கள். ஆனால், எங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இதுவரை நிவாரணம் தரவில்லை. மிகவும் கஷ்டத்தோடு வாடகை வீட்டில் வசிக்கிறோம். எனவே, இனியாவது அரசு எங்களுக்கான நிவாரணத்தை வழங்க வேண்டும்” என்றார்.

இது குறித்து பேசிய உலகம்மாள், “வெள்ளத்தில் வீட்டை பறிகொடுத்து விட்டு தற்போது நான்காயிரம் ரூபாய் கொடுத்து வாடகை வீட்டில் வசிக்கிறேன். நானும் எனது கணவரும் கூலி வேலை தான் செய்கிறோம். தினமும் வேலைக்கு சென்றால் தான் வாழ்க்கை நடத்த முடியும். எனவே, என்னால் எனது வீட்டை சீரமைக்க முடியவில்லை. அரசு தான் எங்களுக்கு உதவ வேண்டும்” என்றார்

இந்நிலையில், இது குறித்து தலையாரி சண்முகத்தை ஈடிவி பாரத் செய்தியாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் கூறியதாவது, “இது தொடர்பாக எங்களிடம் மனு அளித்தார்கள். நாங்களும் ஆய்வு செய்தோம். ஆனால், எங்கள் பகுதிக்கு மட்டும் நிவாரணம் அரசு ஒதுக்கவில்லை. என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை. மீண்டும் அவர்களை விண்ணப்பிக்கும் படி கூறி இருக்கிறோம்” என்று கூறினார். இது குறித்து திருநெல்வேலி வட்டாட்சியரை தொடர்பு கொண்ட போது, “இது குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தால் தான் எனக்கு விவரம் தெரிய வரும். அவர்களை நேரில் வர சொல்லுங்கள்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.