ETV Bharat / state

நெல்லை கல்குவாரிகளில் ரூ.700 கோடி ஊழலா? - குவாரி உரிமையாளர் கூறிய விளக்கம்! - Mines business

Nellai Quarries: நெல்லை மாவட்ட கல்குவாரிகளில் சுமார் ரூ.700 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக, சமீபத்தில் வெளியான பரபரப்பு தகவலைக் குறித்து குவாரி உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Tirunelveli quarry owners explain the viral issue of 700 crore corruption in nellai quarries
நெல்லை மாவட்ட கல்குவாரிகளில் சுமார் ரூ.700 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக தகவல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 10:13 PM IST

நெல்லை மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேட்டி

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த குவாரி விதிமீறி இயங்கியதாலேயே விபத்து நடந்ததாகப் பல புகார் எழுந்தது. ஆகையால் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள குவாரிகளில் அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

இதுபோன்ற சூழ்நிலையில் நெல்லை மாவட்ட கல்குவாரிகளில் சுமார் ரூ.700 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக, சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் சமீபத்தில் பரபரப்பு தகவலை வெளியிட்டது. அதில் நெல்லை திமுக எம்பி ஞானதிரவியம், கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் கிராகெம்பெல் உட்படப் பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், விதிமீறிய கல் குவாரிகளுக்கு துணை ஆட்சியர் விதித்த ரூ.262 கோடி அபராதத் தொகையை ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் சுமார் 15 கோடியாகக் குறைத்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

அதனையடுத்து, நெல்லை கல்குவாரி சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் நெல்லை மாவட்ட கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய சங்கத் தலைவர் ரிச்சர்ட், "நெல்லை மாவட்ட கல்குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரூ.262 கோடியிலிருந்து, ரூ.14 கோடியாக ஜெயகாந்தன் ஐஏஎஸ் குறைத்ததாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளனர். பட்டா உள்ள குவாரிகளில் விதிமீறல் நடக்கும் பட்சத்தில் அள்ளப்பட்ட கனிம வளங்களுக்கான மொத்த விலையை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று சட்டத்தில் இடமில்லை.

ஜெயகாந்தன் மீது தவறான குற்றச்சாட்டை கூறுகின்றனர். அவர் ஏற்கனவே இதே நெல்லை மாவட்டத்தில் கோட்டாட்சியராக இருந்தபோது, சட்டத்துக்குப் புறம்பாகக் கனிம வளங்களைக் கொண்டு சென்ற சுமார் 360 லாரிகளை பறிமுதல் செய்து, அரசுக்கு வருமானத்தைப் பெற்றுத் தந்தார். அதேபோல் 8 ஆயிரம் கோடி அளவுள்ள அரசு நிலங்களை மீட்டுக் கொடுத்துள்ளார், அவரை இணையதளத்தில் அவதூறு பேசுகிறார்கள்.

அப்பாரதத்தைத் தவணை முறையில் செலுத்த முடியுமா? எனக் கேட்டுள்ளனர். மாநில அரசின் சட்டத்தில் அதற்கு வழி இருக்கிறது. மேலும் தொடர்ந்து இணையதளத்தில் எங்களைத் திருடர்களைப் போன்று பேசுகிறார்கள். ஒவ்வொரு குவாரிகளுக்கும் தனித்தனியாக அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அறப்போர் இயக்கம் கூறியபடி, 700 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை.

விதிமறி அள்ளப்பட்ட கனிம வளங்களுக்கு உண்டான விலையில் 15 மடங்கு தொகையை அபராதமாகக் கட்டும்படி கூறினர். அது எப்படி எங்களால் கட்ட முடியும், எனவேதான் சட்டப்படி ஐஏஎஸ் அதிகாரி ஜெயகாந்தன் அபராதத் தொகையைக் குறைத்தார். அவதூறு பரப்ப வேண்டும் என்று திட்டமிட்டு இணையதளத்தில் தகவலை வெளியிட்டுள்ளனர். எங்கள் தாத்தா பார்த்த விவசாயத்தை அப்பா பார்த்தார்கள், அப்பா பார்த்த விவசாயத்தை நாங்கள் பார்க்க விரும்பவில்லை.

குவாரித் தொழிலில் லாபம் இருப்பதால் எங்கள் இடத்தில் தோண்டி கனிம வளங்களை அள்ளுகிறோம். இதில் என்ன தவறு. நாங்களும் மனிதர்கள் தானே, எங்களுக்கும் குழந்தைகள் இருக்கின்றது. மிகத் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். எல்லாத் துறைகளிலும் அரசியல் கட்சியினர் பின்னணியில் இருக்கின்றனர். எம்பியாக இருப்பவர்கள் குவாரி நடத்தக்கூடாது என்று எதுவும் சட்டம் இல்லை.

தப்பு நடந்ததற்குத் தண்டனையை நாங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டோம், மீண்டும் எங்களைத் தண்டிக்கப் பார்க்கிறார்கள். அதிகபட்சம் 55 மீட்டர் ஆழத்திற்குக் கனிம வளங்கள் அள்ளுவதற்கு அனுமதிக்கப்படும். 55 மீட்டரில் 10 லட்சம் கியூபிக் மீட்டர் வரை கனிம வளங்களை அள்ளிக் கொள்ளலாம்.

அதற்கு மேல் அள்ளுவதற்குத் தனியாக அனுமதி பெற வேண்டும். எனவே இதைத் திருட்டு என்று சொல்ல முடியாது. அவதூறு பரப்பிய அறப்போர் இயக்கம் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உக்ரைன் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க காஷ்மீர் உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.