ETV Bharat / state

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் இன்று நல்லடக்கம்! - Nellai Congress Leader Jayakumar - NELLAI CONGRESS LEADER JAYAKUMAR

Tirunelveli congress leader Jayakumar: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் உடல் இன்று மதியம் 12.00 மணியளவில் அவரது சொந்த ஊரான கரைசுத்து புதூரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

Tirunelveli congress leader Jayakumar
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் (காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் புகைப்படம் (Credits to Etv Bharat Tamil Nadu))
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 7:11 AM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் மாயமான நிலையில், தனது தந்தையை காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதற்கிடையே, பாதி எரிந்த நிலையில் கரைச்சுற்றுப்புதூரில் உள்ள தோட்டத்தில் சடலமாக ஜெயக்குமார் நேற்று மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த ஜெயக்குமார் ஏற்கனவே, தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் கேவி.தங்கபாலு பெயர்களை குறிப்பிட்டிருந்ததும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகார் கடிதத்தை அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் ஆன்லைன் வழியாக அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பாதி எரிந்த நிலையில் கிடந்த காங்., நிர்வாகி ஜெயக்குமார் சடலம்.. பரபரப்பை கிளப்பும் புகார் கடிதம்.. நெல்லையில் நடந்தது என்ன? - Nellai Congress Leader Jayakumar

இந்நிலையில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணம் தொடர்பாக, உவரி காவல்நிலையம் போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, அவரது உடலுக்கு முன்னாள் காங்கிரஸ் எம்.பி ராமசுப்பு மற்றும் அவரது உறவினர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் திருநெல்வேலி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜெயக்குமாரின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், ஜெயக்குமாரின் உடல் மதியம் 12.00 மணியளவில் அவரது சொந்த ஊரான கரைசுத்துப் புதூரில் நல்லடக்கம் செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் கரைச்சுத்து புதூர் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் கொலையா? தடயவியல் துறை தகவல்! - Nellai Congress Leader Jayakumar

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.