ETV Bharat / state

"எங்களை ஏற்றினால் உங்க வீட்டு சொத்தா போயிரும்?"- நிற்காமல் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து எச்சரித்த பெண்கள்! - Tiruchuli women free bus issue - TIRUCHULI WOMEN FREE BUS ISSUE

Tiruchuli Women Free Bus Issue: திருச்சுழியில் பெண்களைப் பார்த்ததும் நிறுத்தாமல் அதிவேகமாகச் சென்ற அரசு மகளிர் கட்டணமில்லா பேருந்தை சிறைபிடித்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநரை எச்சரித்த கிராம பெண்கள், "எங்களை பேருந்தில் ஏற்றினால் உங்கள் வீட்டு சொத்தா போயிரும்" எனக் கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பெண்கள் அரசு பேருந்தை சிறைபிடித்த காட்சி
பெண்கள் அரசு பேருந்தை சிறைபிடித்த காட்சி (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 7:41 AM IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி வழியாக காரைக்குளம் வழித்தடத்தில் TN 67 N-O630 எண் கொண்ட அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த அரசு பேருந்தைப் பள்ளி கல்லூரி மாணவர்கள், என அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பேருந்தை சிறைபிடித்து எச்சரித்த கிராம பெண்கள் வீடியோ (Credit - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில் நேற்று காலை காரைக்குளம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தை பள்ளிமடம் பேருந்து நிறுத்தத்தில் வேலைக்குச் செல்லும் பெண்கள் நிறுத்த முயன்றுள்ளனர். அப்பொழுது பெண்களுக்கு கட்டணம் இல்லை என்பதாலும், சாந்து தட்டு, மண்வெட்டி ஆகிய பொருட்கள் கொண்டு வந்ததாலும் ஓசி பயணத்தில் பொருள்களை ஏற்றி வரக்கூடாது எனவும், அப்படி பொருட்களோடு ஏற வந்தால் பேருந்து நிற்காது என்றும், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் செய்யுங்கள் என ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அலட்சியமாகக் கூறி பேருந்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அதேபேருந்து காரைக்குளம் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்த பொழுது ஊரணிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் சிறைபிடித்தனர். மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரைப் பார்த்து "உங்க வீட்டு சொத்தா போகிறது? ஏன் நிப்பாட்டாம போறீங்க" என சரமாரியாக வெளுத்து வாங்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: விமானங்கள் தாமதத்தால் எவ்வளவு லட்சம் பயணிகள் பாதிப்பு? நாடாளுமன்றத்தில் அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.