ETV Bharat / state

மும்பை டூ சென்னைக்கு ரயிலில் போதை மாத்திரை.. 3 இளைஞர்கள் சிக்கியது எப்படி? - Chennai DRUG TABLET SMUGGLING - CHENNAI DRUG TABLET SMUGGLING

Chennai crime: மும்பையிலிருந்து சென்னை வந்த ரயிலில் போதை மாத்திரை கடத்தி வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 6, 2024, 12:58 PM IST

சென்னை: ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்களில் இருந்து போதை மாத்திரைகள் ரயில் மூலமாக தொடர்ந்து கடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மும்பையிலிருந்து ரயில் மூலம் போதை மாத்திரைகள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் பெரம்பூர் ரயில் நிலையத்தின் வெளியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் பையில் மறைத்து வைத்திருந்த 1,940 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இளைஞர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் அவர்கள் சென்னை மீனம்பாக்கத்தை சேர்ந்த சாஜன் குமார் மற்றும் கிண்டி மடுவாங்கரையை சேர்ந்த ஜமால் மற்றும் பரத் என்பதும், ஏற்கனவே இவர்கள் மீது போதை மாத்திரை கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னை ஆலந்தூர், மீனம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1,940 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: “வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது” - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! - Madras High Court

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.