ETV Bharat / state

தாளவாடியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் வயநாடு நிலச்சரிவில் உயிரிழப்பு! - WAYANAD LANDSLIDE DEATH - WAYANAD LANDSLIDE DEATH

TAMIL PEOPLE DIED IN WAYNAD LAND SLIDE: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தின் தாளவாடி மலைப்பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரங்கசாமி, மகேஷ், புட்டுசித்தி
ரங்கசாமி, மகேஷ், புட்டுசித்தி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 5:37 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி காமயன்புரம் கிராமத்தைச் சேர்ந்த சிக்குசித்தா மகன் ரங்கசாமி (60). இவரது மனைவி புட்டுசித்தி (55). இவர்களுக்கு ராஜேஷ் (38), ராதிகா (30), மகஷே் (20) என இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ராஜேஷூக்கு திருமணமாகி கேரளாவில் மற்றொரு பகுதியிலும், ராதிகாவுக்கு திருமணமாகி மைசூரிலும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரங்கசாமி, தனது மனைவி சிக்குசித்தி, மகன் மகேஷூடன் முண்டகை காபி தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டகை, சூரமாலா என்ற இடத்தில் வசித்து வந்தனர்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேரும் உயிரிழந்துள்ளதாக தாளவாடி வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். இதில் முதலில் அடையாளம் காணப்பட்ட புட்டு சித்தம்மாவின் உடல் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள காமையன்புரம் கிராமத்திற்கு கொண்டு வந்து எரியூட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ரங்கசாமியின் உடல் வயநாட்டில் உள்ள மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மகன் மகேஷின் உடலை மீட்புக் குழுவினர் தேடி வருவதாகவும் தாளவாடி வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு; சூர்யா, ஜோதிகா, கார்த்தி இணைந்து ரூ.50 லட்சம் நிதியுதவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.