ETV Bharat / state

ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய பாஜகவினருக்கு அடிஉதை! தாபாவில் களேபரம்! 3 இளைஞர்கள் கைது! - thirupathur

BJP Member attack for chanting Jai shri ram: ஆம்பூர் அருகே தாபா ஒன்றில் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜகவினர் மீது தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவான 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

BJP Members were attacked for chanting Jai shri ram
ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்கியவர்களை தாக்கிய இளைஞர்கள் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 10:34 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தனியார் தாபாவில் உணவு அருந்தி கொண்டிருந்த போது ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்ட பாஜக மாவட்டச் செயலாளரை தாக்கிய மூன்று இளைஞர்களை ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதிகளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' யாத்திரைக்காக வருகை தரவிருக்கும் நிலையில், அண்ணாமலையை வரவேற்க வேலூர் மாவட்ட பாஜகவினர் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

அதன்படி ஆம்பூர் அடுத்த குளிதிகை பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் தாபா ஒன்று அமைந்துள்ளது. வடமாநிலத்தவர்கள் நடத்தி வரும் அந்த தாபா அருகே அண்ணாமலையை வரவேற்க பேனர் வைக்க வேலூர் மாவட்ட பாஜக செயலாளர் லோகேஷ் குமார் என்பவர் நேற்று (ஜன.27) இரவு ஆய்வு செய்துள்ளார்.

பின்னர் தாபாவில் பாஜகவினர் நிர்வாகிகளுடன் உணவு அருந்தச் சென்றுள்ளார். அப்போது லோகேஷ் குமார் மற்றும் பாஜகவினர் திடீரென தாபாவில் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டுள்ளனர். இதனால் தாபாவில் இருந்த இளைஞர்கள் சிலர் ஆத்திரமடைந்துள்ளனர். இந்நிலையில், பாஜகவினருக்கும் தாபாவில் உணவு அருந்தி கொண்டிருந்த வேலூர் மாவட்டம் வளத்தூர் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில், வசீம், பாபு ஆகிய மூன்று இளைஞர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய்த்தகராறு முற்றி இளைஞர்கள் மூன்று பேரும் பாஜக மாவட்டச் செயலாளர் லோகேஷ் குமார் மற்றும் அவருடன் வந்த பாஜக நிர்வாகியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் லோகேஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் உடனடியாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். லோகேஷ்குமாரை தாக்கி விட்டு தலைமறைவாக இருந்த மூன்று இளைஞர்களையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் பாஜக மாவட்டச் செயலாளர் லோகேஷ் குமாரை தாக்கிய இஸ்மாயில், வசீம், பாபு ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்து ஆம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட்ட பாஜகவினர் மீது தாக்குதல்.. திருப்பத்தூரில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.