ETV Bharat / state

நாதகவுக்கு எதிராக 'புரட்சித் தமிழர்' கட்சி... சொத்துக்களை வாரி குவித்ததாக சீமான் மீது குற்றசாட்டு.. மாஜி நிர்வாகி ஆதங்கம்! - ntk seeman - NTK SEEMAN

Former NTK party members started new party: தமிழர்களிடமிருந்து பெறப்படும் திரள் நிதியின் மூலம் சீமான் பல கோடி சொத்துக்களை வாங்கிக் குவித்து இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ராஜா குற்றசாட்டு வைத்துள்ளார்.

புரட்சித் தமிழர் கட்சிக்கொடி
புரட்சித் தமிழர் கட்சிக்கொடி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 6:26 PM IST

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறி புதிதாக "புரட்சித் தமிழர்" என்ற கட்சியினை உருவாக்கி இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “கடந்த 1ஆம் தேதி "புரட்சித் தமிழர்" என்ற கட்சி துவங்கப்பட்டதாகவும், அப்பொழுது நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அவை தமிழ்நாட்டின் சாதிவாரிக் கணக்கெடுப்பு, டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும், நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் திறக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

மேலும், தமிழ் தேசிய அரசியலை மையப்படுத்தி இந்த கட்சி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழகத்தில் 50 ஆண்டுகாலமாக இருக்கும் திராவிட கட்சிகள் ஊழலில் திளைத்து இருப்பதாக குறிப்பிட்டார்.

தற்போது குறிப்பிட்ட தகுந்த வளர்ச்சியை நாம் தமிழர் கட்சி அடைந்திருப்பதாகவும், அதுமட்டுமின்றி, சீமான் மற்றும் அவருடன் இருக்கும் சில ஆதரவாளர்கள் மட்டுமே அந்த கட்சியில் வளர்ச்சி அடைவதாகவும், அடிமட்டத் தொண்டர்கள் யாரும் வளர்ச்சி அடைவதில்லை என குற்றம் சாட்டினார். மேலும், கட்சித் தொண்டர்களுக்கு ஏதாவது பிரச்னை வந்தால் அவர்கள் தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சீமான் கூறிவிடுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கூட வாய்ப்பு இருப்பதாகவும், திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்த நான் அக்கட்சி கொள்கைக்கு விரோதமாக செயல்படுவதால், அதிலிருந்து தன்னை வெளியேற்றிக் கொண்டதாகவும், நாம் தமிழர் கட்சியினை வாரிசு கட்சியாக மாற்றி இருப்பதாகவும், தனது மனைவி மற்றும் மகனை கட்சிக்குள் கொண்டு வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நாம் தமிழர் கட்சியை சீமான் உருவாக்கவில்லை, சுபா முத்து குமார் உள்ளிட்ட பல தமிழ் தேசியவாதிகளால் உருவாக்கப்பட்டது. பிரபாகரனையே தான் அறிமுகப்படுத்தியது போன்று சீமான் மேடைகளில் பேசி வருவது ஏற்புடையதாக இல்லை, தமிழ் தேசியம் தமிழ் தேசியம் என்று கூறுகிறார். தமிழர்களுக்காக தற்போது வரையில் என்ன செய்துள்ளார் என கேள்வி எழுப்பினார்.

தற்போது 36 லட்சம் வாக்குகள் சீமானுக்கு விழுந்திருப்பது என்றால்ம் அது தமிழ் தேசியத்திற்காக, சீமான் பேசியதற்காக விழுந்த வாக்குகள் இல்லை. சீமான் பல கோடி சம்பாதித்து வைத்திருப்பதாகவும், உலகத் தமிழர்கள் திரள் நிதியின் மூலமாக அதிகளவு வருவாய் கிடைப்பதாகவும், அதில் சீமான் தனது மனைவி மற்றும் அவரது பெயரில் வாங்கி வைத்திருப்பதாகவும் அவர் புகார் கூறினார்.

மேலும், 2011-ல் சசிகலாவிடம் 13 கோடி ரூபாய் பணம் சீமான் வாங்கியதாகவும், இது போன்ற தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகளிடம் வேட்பாளர் அறிவிக்கும்போது பணத்தைப் பெற்று வேட்பாளர்களை அறிவிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: மழைக்காலத்திற்கு தயாரா? வெள்ளம் வந்தால் செய்ய வேண்டியவை! செய்யக் கூடாதவை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.