திருநெல்வேலி: சுந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 253வது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் இருக்கும் முழு உருவச் சிலைக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, தூத்துக்குடி எம்பி கனிமொழி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர், துணைமேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான் ஒண்டி வீரன் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. திமுக ஆட்சியில் அருந்ததிய சமுதாயத்திற்கான மூன்று சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுதினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 20, 2024
ஆங்கிலேயர்களுக்கு எதிரான அவரது வீர வரலாற்றையும், தியாகத்தையும் தமிழ்ச்சமூகம் என்றென்றும் நினைவில் ஏந்தியிருக்கும். pic.twitter.com/uyzpKBYVAJ
அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் சிலரால் வழக்கு தொடர்ந்த போதிலும், அந்த வழக்கில் மிகப்பெரிய வெற்றியை முதலமைச்சர் பெற்றுக் கொடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் தலைமையில் நடக்கும் ஆட்சி ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கும் உழைக்கக்கூடிய அரசாக செயல்பட்டு வருகிறது.
வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் உழைக்கக்கூடிய அரசாக செயல்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும் என்று பாரபட்சம் இல்லாமல் நடக்கும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.
அருந்ததியர்களுக்கான மூன்று சதவீத இட ஒதுக்கீடு தேவை என்பதே திமுகவின் நிலைப்பாடு. தொடர்ந்து முதலமைச்சரால் அந்த நிலைக்காக போராடப்படும். எந்த விதத்திலும் அதனை விட்டுக் கொடுக்க மாட்டோம். இட ஒதுக்கீடு என்பது சட்டரீதியான போராட்டத்தின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது.
மக்களுக்கு கிடைக்கக் கூடிய உரிமைகளுக்காக திமுக தொடர்ந்து போராடி வருகிறது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வரக்கூடிய நிதி வரவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி வரவில்லை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி முதலமைச்சரால் கேட்டும் அது கிடைக்கப் பெறவில்லை என, எதுவும் கிடைக்காத நிலையில் மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்?
பாஜக உடனான திமுகவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போன்று தெரிகிறதே என்ற கேள்விக்கு,
மக்களிடமும், மனிதருடனும் பழகும் போது எளிமையாக அன்பாக பழகக் கூடியவர் முதலமைச்சர். அதே வேளையில், தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காக போராடும் போது கருணாநிதியைப் போல் உறுதியாக இருப்பார்” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : "மதவாத சக்திகளுடன் முதல்வர் சமாதானம் செய்ய மாட்டார்" - செல்வப்பெருந்தகை கருத்து! - DMK BJP secret alliance issue