ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024: தூத்துக்குடியில் முத்தெடுத்த கனிமொழி! - Lok Sabha Election Result 2024 - LOK SABHA ELECTION RESULT 2024

Thoothukudi Lok Sabha Election Results 2024: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி அமோக வெற்றி பெற்றார். மேலும், தூத்துக்குடியில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகளின் முழு விபரத்தை காணலாம்..

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள்
தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 4, 2024, 12:16 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், திமுக வேட்பாளர் கனிமொழி, அமுதிக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை விட 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள விபரம்..

வ.எண்வேட்பாளர்கள் கட்சிபெற்ற வாக்குகள்
1கனிமொழிதிமுக5,40,729
2சிவசாமி வேலுமணி அதிமுக 1,47,991
3விஜயசீலன்தமாகா1,22,380
4ரோவெனா ரூத் ஜேன்நாதக1,20,300

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்:

  • வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே வெற்றி முகத்தில் இருந்த திமுக தூத்துக்குடியில் மாபெரும் வெற்றியை தழுவியுள்ளது. தற்போது வரை திமுக வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், 4,74671 வாக்குகள் பெற்றுள்ளார்.
  • 11ஆம் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் கனிமொழி 3,09,367 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அவரை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 84,433 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜென் 68,500 வாக்குகள் 3வது இடத்திலும் உள்ளனர். தமாக வேட்பாளர் விஜயசீலன் 67,506 வாக்குகள் பெற்றுள்ளார். அந்த வகையில் கனிமொழி அதிமுக வேட்பாளரை விட 2,24,934 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
  • தூத்துக்குடி மக்களவைத் தொகுதி 9ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கனிமொழி, 2,55,531 வாக்குகள் பெற்று 1,85,456 வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். அவரை தொடர்ந்து அதிமுக 70,095 வாக்குகளும், தமாக 54,952 வாக்குகளும, நாம் தமிழர் 57,859 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
  • வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதலே திமுக வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், ஏழாம் சுற்று முடிவில், திமுக 1,95,369 வாக்குகள் பெற்றுள்ளது. கனிமொழியை தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 55,352 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்திலும், தமாக வேட்பாளர் விஜயசீலன் 45,202 வாக்குகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவீனா ரூத் ஜென் 44,630 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் அடிப்படையில் திமுக வேட்பாளர் கனிமொழி, 1,40,017 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

திமுக -அதிமுக நேரடி போட்டி: தூத்துக்குடியில் கடந்த முறை திமுக வேட்பாளரான கனிமொழிக்கு, பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் போட்டியை கொடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இந்த முறை, பாஜக கூட்டணியில் தூத்துக்குடி தொகுதி தமாகவுக்கு ஒதுக்கப்பட்டு, எஸ்டிஆர் விஜயசீலன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தமாகாவுக்கு வாக்கு வங்கியே இல்லாத தூத்துக்குடி தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோதே, இங்கு திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தான் நேரடி போட்டி எனும்படியாக களம் மாறிவிட்டதாக சொல்லப்பட்டது.

2019 தேர்தல் நிலவரம்: கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் இங்கு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி மற்றும் அப்போதைய பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இரண்டு பெண் வேட்பாளர்கள் நேரடியாக களம் கண்டனர். இதனால் தூத்துக்குடி நட்சத்திர தொகுதியாக மாறியது.

அந்தத் தேர்தலில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 14,25,401 உள்ள நிலையில், ஆண்கள் 7,00,371 வாக்காளர்களும், பெண்கள் 7,24,912 வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 116 வாக்காளர்களும் உள்ளனர். இத்தேர்தலில், 9,91,263 வாக்குகள் (71.3%) பதிவாகின.

பதிவான மொத்த வாக்குகளில் திமுக வேட்பாளர் கனிமொழி 5,63,143, வாக்குகளும் (56.81%), பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் 2,15,934 (21.78%) வாக்குகளும் பெற்றனர். சுயேச்சை வேட்பாளர் புவனேஸ்வரன் 76,886 வாக்குகள் (7.75%), நாம் தமிழர் கட்சியின் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் 49,222 ஓட்டுகள் (4.97%) மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பொன்குமரன் 25,702 வாக்குளையும் (2.59%) பெற்றனர்.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: தூத்துக்குடியில் முத்தெடுக்கப் போவது யார்? - Lok Sabha Election Result 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.