ETV Bharat / state

தையல் இயந்திரம் உருவாக்கிய மருத்துவர்.. தனி ஆளாக நின்று மகன் கனவை நிறைவேற்றிய தாய்.. தூத்துக்குடி நெகிழ்ச்சி சம்பவம்! - THOOTHUKUDI GOVT SCHOOL MBBS

Thoothukudi Govt School Student Got MBBS Seat: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப் பள்ளி மாணவருக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சீட் பெற்று தனது தாய்க்கு பெருமை சேர்த்துள்ளார்.

நந்தகோகுல் மற்றும் அவரது தாய் வனிதா
நந்தகோகுல் மற்றும் அவரது தாய் வனிதா (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 1:05 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கீரனூர், நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் - வனிதா தம்பதியர், இவர்களுக்கு 2 மகள்களும் நந்தகோகுல் என்ற ஒரு மகனும் உள்ளனர். ஆட்டோ ஓட்டுநரான மணிகண்டன் கடந்த 8 வருடத்திற்கு முன்னர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி வனிதா ஆத்தூர் அருகே உள்ள தனியார் மீன் பதப்படுத்தப்படுத்தும் தொழிற்சாலையிலும், வீட்டில் வைத்து தையல் தைத்தும் தனது 3 பிள்ளைகளையும் வளர்த்து வருகிறார்.

கீரனூர் நந்தகோகுல் சிறப்புத் தொகுப்பு (Credit - ETV Bharat Tamil Nadu)

இத்தகைய சூழ்நிலையில், நந்தகோகுல் ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து, கடந்த 2023ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 600க்கு 484 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனையடுத்து, மருத்துவம் படிக்க நினைத்த நந்தகோகுல் அந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை எழுதியுள்ளார். ஆனால், தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை.

இருந்த போதிலும், மகனின் மருத்துவ கனவை நிறைவேற்ற எண்ணிய நந்தகோகுலின் தாய் வனிதா, இரவு, பகலாக தொழிற்சாலையில் பணி செய்தும், வீட்டில் தையல் தொழிலில் கிடைத்த குறைந்த வருமானத்தை வைத்து நந்தகோகுலை தனியார் நீட் பயிற்சி வகுப்பில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

இத்தகைய சூழலில், விடாமுயற்சியோடு கடினமாக உழைத்த நந்தகோகுல், அண்மையில் நடந்த நீட் தேர்வில் 720க்கு 641 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கு தேர்வாகியுள்ளார்.

இதுகுறித்து நந்தகோகுல் கூறுகையில், 12ஆம் வகுப்பில் 484 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த நிலையில், தற்போது நீட் தேர்வில் 641 மதிப்பெண் பெற்று அரசு இட ஒதுக்கீட்டில் 10வது இடம் பிடித்து, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கான சீட் கிடைத்துள்ளது.

அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இட ஒதுக்கீடு மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் அந்த வாய்ப்பை பயன்படுத்தி 2வது முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளேன். மேலும், கீரனூர் கிராமத்தில் மருத்துவர்கள் இல்லை. ஆகவே, எங்கள் கிராமத்தில் முதல் மருத்துவர் என்ற மகிழ்ச்சி எனக்கு உள்ளது.

எங்களுடைய சிறு வயதிலேயே தந்தை தவறிவிட்டார். அதன் பிறகு அம்மா தான் என் சகோதரிகளையும், என்னையும் படிக்க வைத்தார்கள். மேலும், என்னுடைய கனவை அவர்களது கனவாக எண்ணி என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி" என கூறினார்.

இது குறித்து நந்தகோகுலின் தாய் வனிதா கூறுகையில், "என்னுடைய மகன் நந்தகோகுல் நீட் தேர்வில் 10வது இடம் பிடித்து மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில், சேர இருக்கிறார். படிப்பு என்ற ஒன்று இல்லாததால்தான் நான் இவ்வளவு ஏழ்மையில் உள்ளேன். ஆனால், என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று சொல்லியேதான் வளர்த்தேன்.

மேலும், படிக்க வேண்டும், நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று ஆசிரியர்களும் எனது மகனை மருத்துவம் படிக்க ஊக்க படுத்தினார்கள். எனவே, மருத்துவம் படித்து மக்களுக்கு உதவி செய்வான் என்ற நம்பிக்கையில், ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நீட் தேர்வுக்கு பயிற்சியளித்து தற்போது வெற்றி பெற்றுள்ளான்.

இது போன்று சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைப்பது மிக அரிதான விஷயம், அவனது தந்தை இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இருந்தாலும், பிறருக்கு உதவவேண்டும் என்ற அவரது எண்ணத்தை என் மகன் செய்வான்" என்று கூறியபடி கண்கலங்கினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: 7.5 இட ஒதுக்கீட்டில் ஒரே குடும்பத்தில் 3 மருத்துவர்கள்.. தருமபுரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதித்தது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.