ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு இன்பச் சுற்றுலா.. மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி அசத்தல் ஏற்பாடு! - Melachokkanathapuram town panchayat - MELACHOKKANATHAPURAM TOWN PANCHAYAT

Labour Day Special: தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இலவச இன்பச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பணியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.

Labour Day Special
தூய்மை பணியாளர்களுக்கு இலவச இன்ப சுற்றுலா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 2:57 PM IST

தூய்மை பணியாளர்களுக்கு இலவச இன்ப சுற்றுலா ஏற்பாடு

தேனி: உலகம் முழுவதும் மே 1ஆம் தேதியான இன்று உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக புதுவித ஏற்பாட்டைச் செய்துள்ளது.

அதாவது, மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 2 நாட்கள் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளுக்கு இலவச இன்பச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்குரிய அனைத்து செலவும் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுலா செல்லும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான உணவு மற்றும் போக்குவரத்தில் சென்றுவதற்கான அத்தியாவசிய செலவுத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளான குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரப் பிரிவு தவிர மற்றும் அனைத்து தூய்மைப் பணியாளர்களும் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலாவில் பங்கேற்றனர்.

தூய்மைப் பணியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமான இந்த ஏற்பாடுகளை மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் காளி கண்ணன் ராமசாமி செய்திருந்தார். மேலும், பேரூராட்சி செயல் அலுவலர் இளங்கோவன் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: ஆசிரியர் கவனத்திற்கு.. எமிஸ் பற்றி இனி கவலை வேண்டாம்.. டேராடூனில் அமைச்சர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! - Minister Anbil Mahesh Poiyamozhi

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.