தேனி: பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு சட்டப்பேரவை கொறடாவாக பதவி வகித்து வரும் இரா.அருள், மக்கள் பிரச்னை தொடர்பாக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தியை தொலைப்பேசியின் மூலம் தொடர்புகொண்டு பேசியதாகவும், அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினரான அருளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாகவும் தேனி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக, பெரியகுளம் நகரச் செயலாளர் முத்தையா தலைமையிலான பாமக நிர்வாகிகள், தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரியகுளம் டிஎஸ்பி சூரக்குமரனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் 8 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் தீவிரம்! - Erode Voting Machine Allocation