ETV Bharat / state

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் முழுவதும் ஜெயில் தான்.. புது சட்டத் திருத்தம் செல்வது என்ன? - Tn Prohibition Amendment Bill

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 2:59 PM IST

Updated : Jun 29, 2024, 3:30 PM IST

Tamil Nadu Prohibition Amendment Bill: தமிழகத்தில் கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டால் குற்றவாளிக்கு ஆயுட்காலம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரைக்கும் அபராதம் விதிக்க சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி பேரவையில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது; கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போதுள்ள 1937ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் படி, விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்வது, ஏற்றுமதி செய்வது ஆகிய குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது. இதே போல மனித உயிருக்கு கேடு விளைவிக்கக்கூடிய கள்ளச்சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக்கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதி இச்சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா: தமிழ்நாட்டில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம். கள்ளச்சாரயத்துடன் கலக்கப்படக்கூடிய குடி தன்மை இழந்த எரிசாராயம், மெத்தனால் போன்ற தடை செய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தண்டனை அதிகரிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது.

இதற்காக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில் சிறைத் தண்டனையின் கால அளவை அதிகரித்தும், தண்டனைத் தொகையினுடைய அளவையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மதியை மயக்கக்கூடிய மருந்தினை தயாரிக்க கொண்டு செல்வற்கும், வைத்திருப்பதற்கும் நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த மதுவினை அருந்துவதால் மரணம் ஏற்பட்டால் ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனையோடு, 10 லட்சம் ரூபாய் வரைக்கும் அபராத தண்டனை விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது தண்டனை பெற்றோர் ஜாமீன் கோர முடியாது, அவ்வாறு கட்டாயம் ஜாமீன் வேண்டும் என்றால் அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் அவசியம் ஆகும். குற்றங்களுக்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்வதோடு, மது அருந்துவதற்கு பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்களை மூடி சீல் வைக்கவும், இந்த குற்றங்களை செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை செய்வதிலிருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு பிணைமுறிவிணை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத்துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

இதுபோன்று குற்றங்களைச் செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் இதில் ஈடுபடக்கூடிய நபர்கள், பயன்படுத்தக்கூடிய பொருள்கள், இடம் என அனைத்தையும் வரைமுறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராதத் தொகைகளையும் அதிகரித்து மற்றும் அதிகாரிகளுக்கான அதிகாரம் வழங்குவதற்கான வழிவகை செய்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது என சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொடநாடு வழக்கு; 8 ஆயிரம் பக்கம் அறிக்கை, 'வெளிநாட்டு செல்போன் அழைப்பு' - முதல்வர் தகவல்

Last Updated : Jun 29, 2024, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.