ETV Bharat / state

சுயமரியாதை இயக்கம்: நூற்றாண்டுகால சமுக நீதி தொடர்ந்து தற்போதைய காலத்துக்கும் பொருத்தமாக இருப்பது எப்படி?

தமிழ்நாட்டில் பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம் நூறு ஆண்டுகளை தொட உள்ள நிலையில் இப்போதைய காலகட்டத்துக்கும் பொருத்தமாக இருப்பது குறித்து பொருளாதாரம் மற்றும் சமூக ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர் தேவேந்திரா எழுதியுள்ள கட்டுரை

பெரியார் (கோப்பு புகைப்படம்)
பெரியார் (கோப்பு புகைப்படம்) (Image credits-Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2024, 4:55 PM IST

ஹைதராபாத்: சிறைகளில் உள்ள கைதிகள் சாதி ரீதியாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதன் வாயிலாக இன்றைய நவீனகால அமைப்புகளிலும் சாதி ரீதியிலான பாகுபாடு நிலைத்திருக்கிறது என்பது தெரியவருகிறது. நகர்ப்புற சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை தாழ்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேர்ந்த 92 சதவிகிதம் பேர் சுத்தம் செய்து வருகின்றனர் என்று அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது. இந்த சமூகத்தினர் மீது திட்டமிட்ட ஒடுக்குமுறையயையை மேலும் இது விளக்குகிறது.

1925ஆம் ஆண்டு ஈ.வே.ரா.ராமசாமி (பெரியார்) தலைமையில் நடந்த சுயமரியாதை இயக்கத்தில், அநீதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை நாம் நெருங்கும் இந்த தருணத்தில், அதன் தோற்றம், பங்களிப்புகள், நீடித்த தாக்கம் ஆகியவை குறித்து திரும்பவும் நினைவு கூர்வது முக்கியமானதாக இருக்கும். 1925ஆம் ஆண்டு ஈ.வே.ராமசாமி(பெரியார்)யால் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தென் இந்தியாவின் சமூக, அரசியல் அடிப்படைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

சமூக நீதி,பாலின சம உரிமை, சாதியை முற்றிலும் ஒழிப்பது ஆகியவற்றுக்கான அழைப்பு என்பது ஆழமாக வேரூன்றிய ஒடுக்குமுறை அமைப்புகளுக்கு சவால் விடுக்கும் வகையில் இருந்தது. ஒரு நூற்றாண்டு காலமாக அதனை நாம் எதிரொலிக்கின்றோம். இந்த விஷயத்தில் ஆந்திரா தலைவர்கள் ஆற்றிய பங்கு குறித்து, ஆந்திர பிராந்தியத்தில் இந்த இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து, திராவிட மாநிலங்களில் சமகால தொடர்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் மற்றும் தாக்கம்: சாதிய ஒடுக்குமுறை, பாலின சம உரிமை இன்மை ஆகிய இந்திய சமூகத்தின் இயல்பான படிநிலைக்கு பதிலாக சுயமரியாதை இயக்கம் வலுப்பெற்று எழுந்தது. சமூக, ஆன்மீகம், அரசியல் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிராமணிய மேலாதிக்கத்தை தகர்க்க வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கமாக இருந்தது. இந்த இயக்கம் பகுத்தறிவை ஆதரித்தது. சாதி ரீதியிலான மேலாதிக்கம், சமூக அநீதி நீடித்திருக்க வேண்டும் என்பதை ஆதரிக்கும் மூட நம்பிக்கைகளை இந்த இயக்கம் புறந்தள்ளியது. சமூக மாற்றம், சம உரிமை ஆகியவற்றின் கொள்கைகளை எதிரொலிக்கும் சாதிக்கு எதிரான சீர்திருத்தவாதிகளான ஜோதிராவ் பூலே, பி.ஆர்.அம்பேத்கர் போன்றவர்களால் பெரியார் ஈர்க்கப்பட்டார்.

மகாத்மா ஜோதிபா பூலே(கோப்பு படம்)
மகாத்மா ஜோதிபா பூலே (கோப்பு படம்) (Image credits-ETV Bharat)

ஆரிய ஆதிக்கம் கொண்ட கதைகளுக்கு எதிராக திராவிடர் அடையாளம் சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமான காரணியாக இருந்தது. பெரியார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், வெளிப்படையான திராவிடர் என்ற அடையாளத்தை ஆதரித்ததன் மூலம் கலாசார ரீதியிலான, அரசியல் ரீதியிலான வடக்கின் ஆதிக்கத்துக்கு சவாலாக இருந்தனர். இந்த இயக்கம் அந்த காலகட்டத்தில் சாதிகளுக்கு இடையே கலப்பு திருமணம், பெண் உரிமைகள், பாகுபாட்டுக்கு வித்திடும் சடங்குகளை ஒழிக்க வேண்டும் உள்ளிட்டவற்றில் தீவிரமாக இருந்தது. ஒருங்கிணைந்த சிந்தனை இயக்கமாக, சீர்த்திருத்தை மட்டும் கோராமல், சமூக நடைமுறையில் புரட்சிகளை கோரியது.

இந்த இயக்கம் குறிப்பாக தமிழ்நாட்டில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் சிந்தனைகள் திராவிட அரசியலின் அடிப்படையாக அமைந்தது. அது தமிழ்நாட்டில் விடுதலைக்குப் பிறகான, திராவிட முன்னேற்றக்கழகம் போன்ற கட்சிகளின் வாயிலாக மைய கருத்தாகவும் விளங்கியது. சுயமரியாதை இயக்கம் அரசியல், சமூக நீதிக்கு இடையான தொடர்பில் மறுவரை ஆனது. தனிதன்மை வாய்ந்த அரசியல் சிந்தனையை உருவாக்கி தொடர்ந்து தமிழ்நாட்டின் அரசாளுமையில், சமூக கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆந்திர பிராந்தியத்தில் சுயமரியாதை இயக்கம் மற்றும் அதில் ஆந்திர தலைவர்களுக்கான பங்கு: சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் என்பது தமிழ்நாட்டுக்கு வெளியேயும் பரவியது.அண்டை மாநிலமான ஆந்திர பிராந்தியத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த பல தலைவர்கள் இந்த இயக்கத்தின் சிந்தனையில் ஈர்க்கப்பட்டனர். அதன் கொள்கைகளை பரப்புவதில் ஈடுபட்டனர். கந்துகுரி வீரேசலிங்கம் மற்றும் ரகுபதி வெங்கடரத்தினம் நாயுடு போன்ற ஆந்திர தலைவர்கள் இந்தப் பிராந்தியத்தில் குறிப்பாக சாதிரீதியான ஒடுக்குமுறை, பெண் உரிமைகளுக்கு ஆதரவு ஆகியவற்றின் மூலம் ஏற்கனவே சமூக சீர்த்திருத்ததுக்கான தளப்பணியில் ஈடுபட்டனர். இந்த முயற்சிகள் சுயமரியாதை இயக்கத்துக்கு புதுப்பிக்கப்பட்ட உந்துதலைக் கொடுத்தது.

அம்பேத்கர்
அம்பேத்கர் (Image credits-Getty Images)

1920களின் பிற்பகுதியில், 1930களின் முற்பகுதியில் பெரியாரின் சிந்தனை ஆந்திராவின் சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகளால் எதிரொலிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் கொள்கைகளுடன் அவர்கள் சமூக நீதிக்கான இலக்கை ஒருங்கிணைத்தனர். ஆந்திர பிரதேசத்தில் கடவுள் மறுப்பு, பகுத்தறிவு ஆகியவற்றின் முக்கியமான நபராக இருந்த கோரா (கோபராஜு ராமச்சந்திர ராவ்) போன்ற தலைவர்கள் சுயமரியாதை சிந்தனையால் ஈர்க்கப்பட்டனர். ஏற்கனவே சமூக, கலாச்சார மாற்றத்தை அனுபவத்தில் உணர்ந்த நிலையில் பிராமணிய மேலாதிக்கம், சாதிய ஒடுக்குமுறை, முடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தின் களமாக ஆந்திரா திகழ்ந்தது.

இதையும் படிங்க: “ஆயிரமாண்டு மடமையைப் பொசுக்கிய அறிவுத் தீ”.. பெரியாருக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

ஆந்திர பிரதேசத்தில், சாதி ரீதியிலான அரசியல் நகர்வில் குறிப்பாக பிராமணர் அல்லாத சாதிகள் மத்தியில் இந்த இயக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் தன்னம்பிக்கையுடன் கூடிய அரசியல் அடையாளத்தை உருவாக்குவதில் பங்களித்தது. சமூக மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளுவதை மறுதலித்து ஒரு விழிப்புணர்வை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியது. மாறாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் உயர்வு மற்றும் சீர்த்திருத்த செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்தது. இந்த சிந்தனைக்கான விதைகள் ஆந்திராவில் பின்னர் வந்த அரசிய முன்னெடுப்புகளின் மூலம் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் உரிமைகள் மற்றும் பிராந்திய கவுரவம் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்த தெலுங்கு தேசம் கட்சி போன்ற கட்சிகள் வளர்ச்சியடைந்ததன் மூலம் காண முடியும்.

சமகாலத்துக்கு உகந்ததாக இருக்கும் இயக்கம்: இன்றைய காலகட்டத்தின் சமூக-அரசியல் பரப்பிலும் சுய மரியாதை இயக்கம் ஏற்றதாக இருப்பது வியப்பளிக்கும் வகையில் உள்ளது. பல்வேறு துறைகளில் இந்தியா வளர்ச்சியைப் பெற்ற போதிலும், சாதி ரீதியிலான பாகுபாடு, பாலின பாகுபாடு, சமூக-பொருளாதார பாகுபாடு காரணமாக தொடர்ந்து போராட்டத்தை சந்தித்து வருகிறது. திராவிட பாரம்பரியத்தை கொண்ட மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் சித்தாந்த ரீதியிலான அடித்தளங்கள் கொள்கை வகுப்பில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சமூக நீதி, உறுதியான நடவடிக்கை மற்றும் சமூக நல திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பிரிவினரை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு கவனம் செலுத்தப்படுகிறது.

சமகால தருணத்தில், இந்த இயக்கம் பகுத்தறிவை விரிவாக்குகிறது. குறிப்பாக நாடு சாதி மற்றும் ஆன்மீக அடையாள அரசியலில் மீள் எழுச்சியுடன் போராடும் நிலையில் மூடநம்பிக்கைகள் மீதான அதன் விமர்சனம் முக்கியத்துவம் வாய்ந்தது. தேசத்தின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பை அச்சுறுத்தும் பிற்போக்குகளை எதிர்ப்பதில் பகுத்தறிவு சிந்தனை மற்றும் கோட்பாட்டை நிராகரித்தல் என்ற இந்த இயக்கத்தின் வலியுறுத்தல் இன்றியமையாததாகும்.

பாலின சமத்துவமின்மை போன்ற நீடித்திருக்கும் விஷயங்களுக்கு தீர்வு காண்பதில் சுய மரியாதை இயக்கம் தொடர்ந்து ஏற்ற ஒன்றாக இருக்கிறது. இந்த இயக்கம் கல்வி மற்றும் பொதுவாழ்க்கை பங்கெடுப்பு ஆகியவற்றின் மூலம் தொடர்ச்சியான பாலின சீர்த்திருத்ததுக்கு வழி அமைத்து பெண் உரிமைகளை முந்தைய காலகட்டத்திலேயே ஆதரித்தது. இன்னும் கூட பாலின அடிப்படையிலான வன்முறை, பாகுபாடு, அரசியலில் பெண்களின் பிரதிநித்துவம் குறைவு போன்றவை தொடர்ந்து நீடித்திருக்கின்றன. இதன் மூலம் இந்த இயக்கத்தின் உண்மையான கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

மேலும், இந்தியாவில் சாதி ரீதியிலான மோதல்கள், சம உரிமை இன்மை அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்தது போல ஜாதி ஒழிப்பு இன்றைக்கும் பொருந்தும் வகையில் சுய மரியாதை இயக்கத்தின் கோரிக்கை உள்ளது. தொடர்ந்து நீடித்திருக்கும் சாதியின் கட்டமைப்பால் சம உரிமையின்மை தொடர்ந்து இந்திய சமூகத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. கொள்கை தலையீடுகள், உறுதியான நடவடிக்கைகள், சம உரிமையை முன்னெடுத்தல் ஆகியவற்றின் மூலம் இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான வழிகளை இந்த இயக்கத்தின் மரபு வழங்குகிறது.

முன்னோக்கி செல்லுதல்: திராவிட மாநிலங்கள் சுய மரியாதை இயக்கத்தை பின்பற்றுவதன் தேவை: நூற்றாண்டு கால சுயமரியாதை இயக்கத்தை மறு ஆய்வு செய்வது, இந்த இயக்கத்தின் முக்கியமான மதிப்பீடுகளுக்கு புத்துயிர் அளிப்பது திராவிட மாநிலங்களுக்கு ஒரு வாய்ப்பான தருணமாகும். மத்திய அரசை நோக்கிய அதிகார குவிப்பு, பெரும்பான்மை அரசியலின் எழுச்சியாக இந்தியாவின் அரசியல் களம் மாறும்போது, சமூக நீதி, பிராந்திய அடையாளம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளைக் கொண்ட இந்த இயக்கத்தை திராவிட மாநிலங்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

திராவிட மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகியவை சம உரிமை, சமூக நீதி மற்றும் பகுத்தறிவு ஆகிய சுயமரியாதை இயக்கத்தின் வெற்றிகரமான மதிப்பீடுகளை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு வழி வகுக்க வேண்டும். இந்த ஈடுபாடு என்பது பாதுகாப்புக்காக மட்டுமின்றி, இட ஒதுக்கீடு கொள்கைகள், கல்வி உதவி தொகைகள், பாலின சமநீதி நடவடிக்கைகள் போன்றவற்றை ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான கொள்கைகளை விரிவு படுத்தவும் உதவும். தவிர தேசிய அரசியலின் ஒரே மாதிரியான போக்குகளை எதிர்க்கும் வகையில் பிராந்திய அடையாளத்தை முன்னெடுத்தல், திராவிட அடையாளங்களை மற்றும் மதிப்பீடுகளை கொண்டாடவும், பாதுகாக்கவும் உறுதி செய்தலுடன் இது தொடர்புடையதாகும்.

சமூக நலக்கொள்கைகள், உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை கொண்ட திராவிட மாடல் அரசு, இந்தியாவின் இதர மாநிலங்களுக்கான மாதிரி வரைபடமாகவும் திகழும். எனினும், சுயமரியாதை இயக்கத்தின் சிந்தனைகளுக்கு தொடர்ந்து உண்மையாக திகழும் இந்த மாநிலங்கள் சாதி ரீதியான ஒடுக்குமுறைகள், பாலின சமநிலை இன்மை ஆகியவற்றுக்காக தொடர்ந்து போராடும் போது, டிஜிட்டல் சம உரிமை இன்மை, சூழல் நீதி, தொழிலாளர் உரிமைகள் போன்ற புதிய சவால்களுக்கும் தீர்வு காண வேண்டும்.

முடிவாக, சுய மரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கால மரபு என்பது நீடித்த தொடர்பு மற்றும் ஆழமான செல்வாக்கு செலுத்துவதில் ஒன்றாக இருக்கிறது. இது சமூகநீதி, பகுத்தறிவு, சம உரிமை ஆகிய கோரிக்கைகள் 1925ஆம் ஆண்டு காலகட்டத்தைப் போல இன்றைக்கும் அவசர தேவையாக இருக்கிறது. எதிர்காலத்தை நோக்கிய நிலையில், இந்த மரபை மேற்கொள்வது அதனை நினைவு கூர்வதற்கு மட்டுமல்ல, தீவிரமாக செயல்படுத்துவதும் மிகவும் நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்திற்கான தேடலை தொடர்ந்து இந்த இயக்கத்தின் கொள்கைகள் வழிநடத்துவதை உறுதி செய்தலும் திராவிட மாநிலங்களுக்கு இன்றியமையாததாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் உள்ள கருத்துகள் எழுத்தாளரின் சொந்த கருத்துகளாகும். இவற்றில் உள்ள கருத்துகள், உண்மைகள் ஈடிவி பாரத்தின் கண்ணோட்டத்தை கொண்டதல்ல)

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.