ETV Bharat / state

களைகட்டிய நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பு பணி.. அதியமான்கோட்டைக்கு படையெடுக்கும் வியாபாரிகள்! - Adhiyaman Kottai Kolu Idols

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான்கோட்டை பகுதியில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதியமான்கோட்டை கொலு பொம்மைகள்
அதியமான்கோட்டை கொலு பொம்மைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 4:10 PM IST

Updated : Oct 1, 2024, 6:10 PM IST

தர்மபுரி: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை. இந்த விழாவின் மிக முக்கியமான அம்சமாக வீடுகளில் கொலு பொம்மைகள் வைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நவராத்திரி பண்டிகை, அக்டோபர் 3ஆம் தேதி (நாளை மறுநாள்) முதல் அக்டோபர் 12ஆம் தே திவரை கொண்டாடப்பட உள்ளது.

இப்பண்டிகையையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி வெகு மும்பரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக தர்மபுரி அடுத்துள்ள அதியமான்கோட்டையில் நவராத்திரி கொலு பொம்மை தயாரிக்கும் பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு, குறிப்பிட்ட அளவிலான நவராத்திரி பொம்மை செட்கள் ஏற்கனவே செய்து முடித்து, அவைகள் குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாம் கட்ட கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிப்பு பணி (Credits - ETV Bharat Tamil Nadu)

களி மண்ணை கொண்டு பல்வேறு வடிவங்களில் கொலு பொம்மைகளாக அச்சுகளில் வடிவமைத்து அவற்றை காய வைத்து பின் தீயில் சுட்டு, தேவையான வண்ணங்கள் பூசப்பட்டு அழகுப்படுத்துவதன் மூலமாக கண்களை கவரும் அழகியலுடன், பக்தி மணம் கமழும் கொலு பொம்மைகள் உருவாகின்றன.

கடோத்கஜன் பொம்மை
கடோத்கஜன் பொம்மை (Credits - ETV Bharat Tamil Nadu)

அதியமான்கோட்டை பகுதியில் தயார் செய்யப்படும் கொலு பொம்மைகளை வாங்குவதில், தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலமான கர்நாடக மாநில வியாபாரிகளும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஈரோடு, சேலம், கோவை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் கொலு பொம்மைகளை சென்ற மாதமே அதியமான்கோட்டை பகுதி பொம்மை உற்பத்தியாளர்களிடம் ஆர்டர் செய்துள்ளனர்.

பெருமாள் பொம்மை
பெருமாள் பொம்மை (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: அங்குசம் இல்லை! பாசம் தான் ஆயுதம்! தமிழ்நாட்டு கும்கிகளின் ஸ்பெஷல் என்ன?

இதுகுறித்து பொம்மை உற்பத்தி தொழிலாளர் சண்முகம் கூறும்போது, "அதியமான்கோட்டையில் 50 ஆண்டுகளாக கொலு பொம்மைகள் செய்து வருகிறோம். இங்கு நவராத்திரி கொலு பொம்மைகள் மட்டும் அல்லாது, அனைத்து வகையான கொலு பொம்மைகளும் செய்கின்றோம்.

சீதா ராமர் கல்யாணம் செட்டு
சீதா ராமர் கல்யாணம் செட்டு (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும் ஒவ்வொறு வருடமும் நவராத்திரி கொலு பண்டிகைக்காக விஷ்ணுவின் தசாவதார காட்சிகள், அஷ்டலட்சுமி, சீனிவாச கல்யாணம், சீதா ராமர் கல்யாணம், லவகுசா பொம்மைகள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சாமி, விஸ்வரூப தரிசன பொம்மை, கல்யாண ஊர்வலம், மியூசிக் செட், மாப்பிள்ளை மற்றும் பெண் அழைப்பு, கார் செட் என 150-க்கும் மேற்பட்ட வகையான செட்டுக்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகளை செய்து வருகிறோம்.

வேலூர், தஞ்சாவூர், கோவை, ஓசூர், சென்னை, பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களும் வியாபாரிகளும் நாங்கள் தயாரிக்கும் பொம்மைகளை ஆர்வமுடன் கொள்முதல் செய்கின்றனர். இமை மூடி திறப்பது போல இந்த வேலை. நுணுக்கங்கள் தான் மிகவும் முக்கியம். ஒரு சிலைக்கு 50 வகையான வண்ணங்களை தீட்டி விற்பனை செய்கிறோம்" என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Oct 1, 2024, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.