ETV Bharat / state

மழை காலம் தொடங்கிடுச்சி..தக்காளி விலையும் குறைஞ்சிடுச்சு..இன்னைக்கே வாங்கிடுங்க! - TOMATO PRICE CHENNAI

மழையினால் வியாபாரம் மந்தம் காரணமாக தக்காளியின் விலை குறைந்துள்ளது என கோயம்பேடு காய்கறி சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 2:23 PM IST

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தக்காளியின் விலை கிலோவுக்கு 90 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று விலை குறைந்துள்ளது.

தக்காளியின் விலை மாற்றம் குறித்து கோயம்பேடு சிறு மற்றும் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.எஸ். முத்துக்குமார் நம்முடைய ஈடிவி பாரத் நிருபரிடம் பேசினார். அப்போது அவர், ''கோயம்பேடு சந்தைக்கு தினமும் 55 முதல் 60 லாரிகளில் சுமார் 1,300 டன் தக்காளி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் விற்பனைக்கு வருகிறது என்றார்.

மேலும், தற்போது அண்டை மாநிலங்களில் மழை பொழிவு இருப்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விளைச்சல் முடிந்து இருப்பதாலும் 32 முதல் 35 லாரிகளில் 850 டன் தக்காளி மட்டுமே விற்பனைக்கு வருகிறது. வழக்கமாக வருவதை விட 400 டன் தக்காளி மட்டுமே வருகிறது. இதன் காரணமாக தக்காளி விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டு கடந்த மாதம் 50 மற்றும் 60 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை நேற்று 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று பெய்த மழை காரணமாக வியாபாரிகள் குறைவாக வந்ததால், விற்பனை மந்தமாகியுள்ளது. இதனால், தக்காளி விலையில் கிலோவிற்கு 10 ரூபாய் குறைத்து விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தவெக மாநாடு:"துபாயில் இருந்து விக்கிரவாண்டி வரும் பாதுகாப்பு நிறுவனம்!"

தொடர்ந்து, கோயம்பேடு சந்தையில் இன்று 25 கிலோ உள்ள பெரிய பெட்டி முதல் தர தக்காளி 1,750 ரூபாய்க்கும், 15 கிலோ உள்ள பெட்டி 750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதில் இரண்டாம் தர தக்காளி 1,450 ரூபாய் முதல் 1,350 ரூபாய் வரையும், சிறிய ரக தக்காளி 650 ரூபாய் முதல் 550 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவதால் மார்க்கெட் பகுதிகளில் சில்லரை விற்பனையாக கிலோ 80 ரூபாய் வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

மேலும், கோயம்பேட்டில் வாங்கப்படும் தக்காளி சென்னையின் புறநகர் பகுதிகளில் கிலோ 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் கர்நாடக பகுதிகளில் மழை குறைந்தால் தக்காளியின் வரத்து அதிகரித்து விலை குறையும் என தெரிவித்திருக்கிறார்.

அதே போல, கோயம்பேடு அங்காடி பகுதிகளில் சிறு மழை பெய்தாலே வியாபாரம் பாதிக்கும் அளவிற்கு தண்ணீர் தேங்கி கழிவு நீருடன் கலந்து நோய் தொற்று ஏற்படும் நிலை உருவாகிறது. கோயம்பேடு அங்காடி வளாகத்தில் உள்ள கழிவு நீர் கால்வாய், மழை வடிகால்களை முறையாக பராமரிக்க வேண்டும் என எஸ்.எஸ். முத்துக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.