ETV Bharat / state

"காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் நிகழ்ந்தது ஏன், எப்படி? - சென்னை மாநகர போலீஸ் விளக்கம்! - Kakka Thoppu Balaji Encounter

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டதல்ல என்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார்
சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 8:41 PM IST

சென்னை: சென்னையில் அதிகாலையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

பிரவேஷ் குமார் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அப்போது பேசிய அவர், "சென்னை கொடுங்கையூர் முல்லை நகரில் இன்று அதிகாலை காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிகாலை 4.32 மணி அளவில் புதுச்சேரி பதிவு எண் கொண்ட கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் இருந்த இரண்டு நபர்களில் ஓட்டுநர் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த நபரை இறக்கி விசாரித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அந்த காரில் இருந்த ஓட்டுநர் காரை எடுத்துக் கொண்டு அதிவேகமாக தப்பிச் சென்றுள்ளார்.

உடனே இந்த தகவலை அங்கு பணியிலிருந்த காவலர் நாதமுனி என்பவர் சென்னை காவல் கட்டுப்பாட்டறைக்கு தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறையிலிருந்து உடனடியாக இந்த தகவலை சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

அப்போது முல்லை நகர் வியாசர்பாடி பிரதான சாலையில் கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரின் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து செய்தி கிடைத்தவுடன் அந்த வழியாக தப்பி வந்த புதுச்சேரி பதிவு எண் கொண்ட காரை அடையாளம் கண்டு நிறுத்திய போது அந்த கார் நிற்காமல் அதிவேகமாக கடந்து சென்றுள்ளது.

அதிவேகமாகச் சென்ற காரை பின் தொடர்ந்த காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் அந்த வாகனம் வியாசர்பாடியில் உள்ள பாழடைந்த பிஎஸ்என்எல் குடியிருப்பு வளாகத்தின் உள் வேகமாக சென்று அதிகாலை 4.50 மணியளவில் நின்றுள்ளது.

இதையும் படிங்க: "காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டருக்கு சம்போ செந்தில் தான் காரணம்" - பாலாஜியின் தாய் பகீர் குற்றச்சாட்டு!

அப்போது காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரது குழுவினர் காரை பின் தொடர்ந்து சென்று பிடிக்க முயன்ற போது அந்த காரில் இருந்து இறங்கிய நபர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் காவல் ஆய்வாளர் சரவணனை நோக்கி சுட்டு உள்ளார்.

இதில் போலீசார் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் குண்டு பட்டது, தொடர்ந்து ஆய்வாளர் சரவணன் எச்சரித்தும் அந்த நபர் அதனை கேட்காமல் இரண்டாவது முறையாக மீண்டும் சுட்டதில் போலீசாரின் வாகனத்தின் இடது பக்க முன்பக்க கதவில் பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், ஆய்வாளர் சரவணன் தங்களை தற்காத்துக் கொள்ள அந்த நபரை நோக்கி சுட்டுள்ளார். இதில் அந்த அந்த நபர் குண்டு பாய்ந்து கீழே விழுந்துள்ளார். உடனே அந்த நபரை காவல் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பணியிலிருந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தபோது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன் பிறகு அந்த காரை சோதனை செய்ததில் 10 கிலோவிற்கும் மேற்பட்ட கஞ்சா மற்றும் ஆயுதங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக நடத்திய விசாரணையில், இறந்த நபர் காக்கா தோப்பு பாலாஜி என தெரியவந்தது. மேலும், இவர் மீது ஆறு கொலை வழக்குகளும், 17 கொலை முயற்சி வழக்குகளும், ஒரு கஞ்சா வழக்கும் மற்றும் 35 இதர வழக்குகளும் உள்ளது. மேலும், ஆய்வாளர் சரவணன் சுடும் வரையில் காக்கா தோப்பு பாலாஜி என்று போலீசாருக்கு தெரியாது.

அதுமட்டும் இல்லாது, சம்போ செந்தில் மற்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கும் இந்த சம்பவத்திற்கு தொடர்பில்லை. சூழ்நிலையை பொறுத்தே துப்பாக்கி சூடு நடந்தது. இந்த, துப்பாக்கி சூடு சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதல்ல" என்று பிரவேஷ் குமார் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.