ETV Bharat / state

"ஊரை விட்டு ஒதுக்கி வெச்சுட்டாங்க" - ஆதார், ரேஷன் கார்டை திருப்பி ஒப்படைக்க முயன்ற குடும்பம்.. தருமபுரியில் நடந்தது என்ன? - Issue of govt documents hand over - ISSUE OF GOVT DOCUMENTS HAND OVER

Dharmapuri Collector: தருமபுரி அருகே நில பிரச்சனை சம்பந்தமாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி அரசு ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க முயன்ற குடும்பத்தினர்
அரசு ஆவணங்களை திருப்பி ஒப்படைக்க முயன்ற குடும்பத்தினர் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 1:31 PM IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம் சின்ன குப்பூர் கிராமத்தைச் சேர்ந்த அப்பாமணி என்பவர் தனது பூர்வீக விவசாய நிலத்தில் விவசாயம் செய்து, குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த பச்சையம்மாள் என்பவரிடம், அடிக்கடி பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.

இதில் தனது நிலத்தை வைத்து வட்டிக்கு பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், பச்சையம்மாளுக்கு கொடுக்க வேண்டிய அசல் மற்றும் வட்டி தொகையை கொடுத்த பிறகும் பணத்தைப் பெற்றுக் கொண்டு, நிலத்தை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இது தொடர்பாக தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல் நிலையத்தில் பச்சையம்மாளுக்கு ஆதரவாக நிலத்தை எழுதிக் கொடுக்க சொல்லி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஆகவே, அப்பாமணி நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குத் தொடுத்துள்ளார்.

அப்போது நீதிமன்றம் சட்டத்துக்கு புறம்பான வழியில் அப்பாமணி உள்ளிட்டவரை தொந்தரவு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அதே பகுதியைச் சார்ந்த செல்வராஜ், முனியப்பன், கோவிந்தராஜ், சின்னசாமி, முனியப்பன், கண்ணன், கிருஷ்ணன், குழந்தை, மாது, ஆறுமுகம் உள்ளிட்டோர் அடங்கிய ஊர் பஞ்சாயத்துதாரர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து அப்பாமணியை அழைத்து நிலத்தை உடனே பச்சையம்மாளுக்கு பதிவு செய்து கொடுக்க வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, அப்பாமணி மற்றும் அவரது குடும்பத்தினர் ஊர் பஞ்சாயத்துக்கு கட்டுப்படாததால் தண்ணீர் மற்றும் வழிபாட்டு தலங்கள், பொது இடங்களில் கால்நடைகளை மேய்க்கக் கூடாது எனவும், குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், அப்பாமணி குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரில் துக்க நிகழ்வு ஒன்றுக்கு சென்றுள்ளனர். அப்பொழுது, இந்த நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடாது என தடுத்ததாகவும், இவர்களுடன் யாரேனும் தொடர்பு வைத்துக்கொண்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் கிராம மக்களுக்கு, ஊர் பஞ்சாயத்துத்தாரர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், அரசு தரப்பில் எத்தனை புகார்கள் கொடுத்தாலும், தங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் கூறி அப்பாமணி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது அரசு ஆவணங்களான ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை நேற்று (ஆக.19) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: வேலூர்: கோயில் இடிப்பு விவகாரம்: நிர்வகிக்க குழு அமைப்பு.. எஸ்.சி., எஸ்.டி பிரிவில் வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.