ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; 29 வேட்பு மனுக்கள் ஏற்பு..! ரேஸில் நிற்கும் மூன்று நட்சத்திர வேட்பாளர்கள் - vikravandi by election

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 4:04 PM IST

vikravandi candidates: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 நபர்களின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி உள்ளிட்ட 35 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் (credit - Etv Bharat Tamil Nadu)

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மறைவை தொடர்ந்து இத் தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜூலை 10) 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அதனை தொடர்ந்து ஜூலை 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதற்கிடையே, இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து 21 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஜூன் 24) விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகமான விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மொத்தமாக 64 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், 56 பேருடைய வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 29 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 35 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இவற்றில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 16 வேட்பாளர்களும், 40 சுயேச்சைகளும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் (புதன்கிழமை) கடைசி நாளாகும். அன்றைய தினமே வேட்புமனுக்கள் இறுதி செய்யப்பட்டு, போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்படுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக தற்போது களம் கண்டுள்ளனர்.

ஸ்ரீமதியின் தாயார் வேட்பு மனு நிராகரிப்பு: இதனிடையே, இத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட விரும்பி மனுதாக்கல் செய்த கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்: விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 275 வாக்குச்சாவடி மையங்களில் ஜூலை மாதம் 10-ந்தேதி வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலின்போது 275 வாக்குச்சாவடி மையங்களில் 1,355 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர்.

இடைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: கணவனை இழந்து தவிக்கும் 44 பெண்கள்.. ஈடிவி பாரத் கள ஆய்வு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.