ETV Bharat / state

லண்டன் செல்கிறார் அண்ணாமலை.. பாஜக தலைமை பொறுப்பை ஏற்கும் கேசவ விநாயகம்..! - annamalai london visit

kesava vinayagam tamil nadu bjp: லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியில் அரசியல் பயிற்சி பயில வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செல்லவிருக்கிறார்.

அண்ணாமலை மற்றும் கேசவ விநாயகம் (கோப்புப்படம்)
அண்ணாமலை மற்றும் கேசவ விநாயகம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 12:58 PM IST

திருப்பூர்: பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான மண்டல தலைவர்கள் கூட்டம் திருப்பூர் அருகே உள்ள கணக்கம் பாளையம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இக்கூட்டத்தின்போது ''தமிழகம் மீட்போம். தளராது உழைப்போம் சமூக நீதியை வழங்குவோம்" என பேசி மண்டல தலைவர்கள் அனைவரையும் அண்ணாமலை உறுதி மொழி ஏற்க சொன்னார்.

மேலும், இந்த கூட்டத்தில் நிர்வாகிகளிடம் தான் வரும் 28 ஆம் தேதி லண்டன் செல்ல இருப்பதாகவும், 3 மாதங்கள் அரசியல் சார் படிப்பினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க இருப்பதாகவும், அதுவரை தமிழக பாஜக பொறுப்பை மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் கவனிப்பார் என கூறப்பட்டதாக பாஜக மண்டல தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அடுத்த 3 மாதத்திற்கு பாஜக மாநில தலைவர் இவர் தான்? கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.