தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஒரத்தநாடு தென்னமாடு பிரதான சாலை வழியாக லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்களையும் 6 பேரை கொண்ட கடத்தல் குழுவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி ஒரத்தநாடு டிஎஸ்பி ஷனாஸ் இலியாஸ் தலைமையில் போதைப் பொருள் ஒழிப்பு தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் (நவம்பர்.17) இரவு ஒரத்தநாடு தென்னமாடு பைபாஸ் பிரதான சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
காரை சோதனை செய்து கொண்டிருந்தபோது அதன் பின்னால் வந்த ஒரு லாரி அந்த வழியாக நிற்காமல் செல்ல முயற்சித்தது. லாரியை மடக்கி பிடித்த போலீசார் அதில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த லாரியில் ஆயிரம் 1000 கிலோ எடையுள்ள சுமார் 6 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் இருந்ததை கண்டறித்துள்ளனர்.
இதையும் படிங்க: School Leave: மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா?
மேலும் காரில் வந்த நபர்களின் ஏற்பாட்டில் அந்த லாரியில் போதைப்பொருளை விற்பனைக்காக கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, லாரி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பிடிபட்ட நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த சிராஜுதீன் (35) அப்துல் வகாப் (38) அப்துல் ரஹீம் (29) ரஷ்த் (43) சர்புதீன் (45) மற்றும் பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜா பக்ருதீன் (40) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் யாரிடம் இருந்து இந்த போதைப்பொருட்களை வாங்கினர், யாருக்கு விற்பனை செய்ய கொண்டு சென்று கொண்டிருந்தனர் என்பது குறித்து ஒரத்தநாடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்