தென்காசி: வாசுதேவநல்லூர் அருகே உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று (மார்ச்.09) மூன்றாவது ஆண்டு பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர்.சந்திரசேகர் வருகை புரிந்து, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், மாணவிகள் படித்துவிட்டு அடுத்து தங்களுடைய வாழ்க்கையை எந்த அளவிற்கு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இந்த தனியார் கல்லூரியில் தற்போது 9 இளங்கலை மற்றும் 3 முதுகலை படிப்புகள் உள்ளன. ஒன்பது துறைகள் உள்ளன. தற்போது 846 மாணவிகள் பயில்கின்றனர்.
நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 137 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்லூரி ஆறாவது இடத்திலும், தென்காசி மாவட்டத்தில் முதல் இடத்திலும் உள்ளது. மேலும், 3 பேட்ச் மாணவிகளும் 100% தேர்ச்சியை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று மூன்றாவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில், 29 மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசையில் (University Ranks) இடம் பிடித்துள்ளனர். மேலும், கணினி அறிவியல் துறையில் எம்.ரசீனா சப்ரியா மற்றும் விலங்கியல் துறையில் கௌரி சங்கரி ஆகியோர் முக்கிய பாடங்களில் (major subjects) யுனிவர்சிட்டி தரவரிசை மற்றும் தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். 8 பாடப்பிரிவுகளுடன் 325 மாணவிகளுடன் மூன்றாம் பேட்ச் (third batch) ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை வாய்ப்பு: பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கல்லூரியில் படிக்கும் மாணவியிடம் கேட்ட பொழுது மாணவி கூறியதாவது, "எங்கள் கல்லூரியில் படிப்பு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் தங்களுடைய வாழ்க்கையினுடைய படிப்பை பற்றியும், பல்வேறு விதமான துறைகளில் நாங்கள் சிறந்து விளங்குவதற்காக கல்லூரியில் படிக்கும் பொழுது எங்களுக்கு பல்வேறு விதமான பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளனர்.
மேலும் இந்த பட்டமளிப்பு விழா எங்களுடைய வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என பல எதிர்பார்ப்பு கனவுகளோடு இந்தக் கல்லூரி எங்களுக்கு கற்றுக் கொடுத்தது எனக் கூறினார்.
முன்னதாக, 2017 - 2020ஆம் ஆண்டு 5 பாடப்பிரிவுகளுடன் 189 மாணவிகளுடன் முதல் பேட்ச் ( first batch) ஆரம்பிக்கப்பட்டது. அதில் 5 மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் (University Ranks) பெற்றுள்ளனர். அதன்பின் 2018 - 2021ஆம் ஆண்டு 7 பாடப்பிரிவுகளுடன் 293 மாணவிகளுடன் இரண்டாம் பேட்ச் (second batch) ஆரம்பிக்கப்பட்டது. அதில், 25 மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் (University Ranks) பெற்றுள்ளனர். அதன்பின் 2019 - 2022ஆம் ஆண்டு 8 பாடப்பிரிவுகளுடன் 325 மாணவிகளுடன் மூன்றாம் பேட்ச் (third batch) ஆரம்பிக்கப்பட்டது. அதில், 29 மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் (University Ranks) பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாநிலங்களவைக்குச் செல்கிறார் கமல்ஹாசன் - மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை!