ETV Bharat / state

அரசு கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணி: ஏப்.29 வரை விண்ணப்பிக்கலாம் என டிஆர்பி அறிவிப்பு! - Teachers Recruitment Board

TRB Notification: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 9:10 AM IST

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, ஆகஸ்ட் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும், அதற்காக வரும் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், "தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 5 மணி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த அறிவிப்பின் மூலம் 3 ஆயிரத்து 921 நடப்பு காலிப் பணியிடங்கள் மற்றும் 79 பின்னடைவு காலி பணியிடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பம் செய்ய தகுதியுடையவர்கள்:

  • தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறைப்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
  • ஜூலை 1, 2024ல் 57 வயது முடியாதவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
  • பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறையின் படியும், உயர் கல்வித் துறையின் அரசாணையின் அடிப்படையில், நெட் (NET-National Eligibility Test) அல்லது செட் (SET- State Eligibility Test) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ் மொழியை பாடமாக எடுத்து படிக்காமல், பிற மொழி எடுத்து படித்தவர்கள் தமிழ் மொழி தேர்வில் பணி நியமனம் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
  • உயர் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது போன்று, கௌரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளதால், அவர்கள் பணி அனுபவச் சான்றுகளை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கலை பாட பிரிவுகள், வணிகவியல், மானுடவியல், கல்வியியல், சமூக அறிவியல், அறிவியல், உடற்கல்வி, இயல், இதழியல் மற்றும் தொடர்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணி நியமனம் செய்யப்படுபவார்கள்.

தேர்வு முறை: உயர் கல்வித் துறை, அரசாணை அடிப்படையில் எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் எனவும் நேர்முகத் தேர்விற்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. முதுகலை பாடங்களில் இருந்து போட்டி தேர்வு கேள்விகள் இடம் பெறும்.

தாள் ஒன்றில் மூன்று மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. அதில், பகுதி ஒன்றில் தமிழ் பாடத்தில் 25 மதிப்பெண்கள், பொது அறிவு 25 மதிப்பெண்கள் என மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும். பகுதி இரண்டில் இரண்டு மணி நேரத்திற்கு 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். தாள் இரண்டில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நேர்காணலுக்கு 30 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு, உயர் கல்வித் துறையின் அரசாணையின்படி, அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாஜக 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நிதின் கட்காரி, அனுராக் தாகூர் உள்ளிட்டோர் மீண்டும் போட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.