ETV Bharat / state

78வது சுதந்திர தினம்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து! - 78th independence day - 78TH INDEPENDENCE DAY

78th independence day: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 15, 2024, 10:10 AM IST

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் விஜய், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். மாநிலம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். மேலும் பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள், சமூக பிரச்சனை, இயற்கை பேரிடர்கள் தொடர்பாக கட்சியின் சார்பில் விஜய் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று 78வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், "சாதி, மத, மொழி , இன வேறுபாடுகளை கடந்து சமூக நல்லிணக்கத்தோடும், வேற்றுமையில் ஒற்றுமையோடும் நம் விடுதலைக்காக பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம்.

எண்ணற்ற உயிர்களை தியாகம் செய்து போராடி பெற்ற விடுதலையை கொண்டாடி மகிழ்வோம். நாட்டின் வளர்ச்சிக்காக என்றென்றும் பாடுபடுவோம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். அடுத்த மாதம் கோட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், நாளை மறுநாள் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இயக்குநர் எச் வினோத் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆயிரத்தில் ஒருவன் போன்று தங்கலான் எனக்கான வாய்ப்பு.. GV பிரகாஷ் பேச்சு! - GV Prakash about Thangalaan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.