ETV Bharat / state

மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்! - tamilnadu Government

Polio camp 2024: தமிழகம் முழுவதும் மார்ச் 3ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

polio day
polio day
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 10:45 PM IST

Updated : Feb 29, 2024, 10:38 AM IST

சென்னை: குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, ஆண்டு தோறும் போலியோ சொட்டு மருந்து வழக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான போலியோ செட்டு மருந்து முகாம் வரும் மார்ச் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், "5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு,போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 03 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகம் முழுவதும் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறும்.

இம்மையங்களில் 57.84இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

முக்கிய அம்சங்கள்:

1.சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.

2.தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவுவது அல்லது Sanitizer உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.

3. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

4. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

5. விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

6.புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

7. போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் (Transit Booths) சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

8. போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கண்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

9. போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Last Updated : Feb 29, 2024, 10:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.