ETV Bharat / state

"தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதா?” - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்! - TAMILTHAI VAZHTHU ISSUE

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் (Credits - Udhay x page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2024, 1:44 PM IST

Updated : Oct 25, 2024, 2:54 PM IST

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்தை அங்கிருந்த அரசு ஊழியர்கள் மூவர் எழுந்து பாடினர். அப்போது, கண்டமிதில் (கண்டம் + இதில்) என்பதை கண்டமதில் (கண்டம் + அதில்) என்றும், புகழ் மணக்க என்பதை 'திகழ்' மணக்க என்றும் பிழையுடன் பாடினர். மேலும், மைக் சரியாக வேலை செய்யாததால், திராவிட நல் திருநாடும் என்ற வரியில் 'திருநாடும் ..' என்ற வார்த்தை ஒலிபெருக்கியில் ஒலிக்காமல் இடைவெளி ஏற்பட்டது.

இவ்வாறு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையுடனும், தடுமாற்றத்துடனும் அரசு ஊழியர்கள் பாடியதைப் பார்த்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது அருகில் அமர்ந்திருந்த சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமதுவிடம் நிகழ்ச்சியின் நிறைவில் பிழையின்றி ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடச் செல்லுமாறு கூறினார்.

துணை முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி இரண்டாம் முறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய அரசு ஊழியர் குழுவினர் மீண்டும் அதே பிழையுடன் கண்டமிதில் (கண்டம் + இதில்) என்பதை கண்டமதில் (கண்டம் + அதில்) என்று பிழையுடன் பாடியதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

முதல்முறை மைக் சரிவர இயங்காததால் 'திராவிட நல் திருநாடும்..' என்ற வரியை சரியாக பாடினார்களா என கண்டறிய முடியாத வகையில் பாடியவர்களின் குரல் சில இடங்களில் தெளிவாக கேட்காமல் இருந்தது. ஆனால் இரண்டாம் முறை மைக் தெளிவாக இயங்கியதால் பிழைகள் அனைத்தும் தெளிவாக தெரிந்தன.

நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர், "தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட 30 பேரில் 19 பேர் நிறைவு செய்து இன்று சான்றிதழ் பெற்றுள்ளனர். பாரதிதாசன் மேலாண்மை கல்லூரியுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.6.5 கோடியில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அடுத்த 2 ஆண்டுக்கு இப்பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடப்படவில்லை. அவர்கள் பாடும்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக , மைக் சரியாக வேலை செய்யவில்லை. ஆதலால் 2..3 இடத்தில் அவர்களது குரல் கேக்கவில்லை. எனவே மீண்டும் சரியாக பாட வைத்மோம். நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய கீதமும் பாடப்பட்டது.

தேவையில்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக மீண்டும் எந்த பிரச்னையும் கிளப்பி விடாதீர்கள்" என்று கூறினார். முன்னதாக, கடந்த வாரம் தூர்தர்ஷன் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக தெரிந்த ஆளுநர் விழா மேடையில் கண்டிக்காதது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி

இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னைத் தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை தவறாக பாடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக கூறி அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் மீது இனவாத கருத்துக்களை முன்வைத்த முதலமைச்சர் அவர்களும், ஆளுநர் அவர்களின் வயது மற்றும் பொறுப்பைக் கூட உணராமல் பொதுவெளியில் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்த துணை முதலமைச்சர் அவர்களும் தற்போது நடைபெற்றிருக்கும் தமிழ்த்தாய் அவமதிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.

துணை முதலமைச்சர் தலைமை தாங்கிய நிகழ்வில் அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டிருப்பதன் மூலம், தமிழ்ப்பற்று மற்றும் தாய்மொழிப்பற்று எனும் திமுக அரசின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது.

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற வரிகளுக்கு ஏற்ப தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமதிப்பை சாதாரண நிகழ்வாக கடந்து செல்லாமல், அதற்கு காரணமானவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்" என கூறப்பட்டிருக்கிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 25, 2024, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.