ETV Bharat / state

மகாராஷ்டிரா எஃபெக்ட்: தமிழ்நாட்டில் 2026 ஆட்சியில் பாஜக பங்கு பெறும் - தமிழிசை சூளுரை..!

வயநாட்டில் பிரியங்கா காந்தி வேண்டுமானால் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

பட்டாசு வெடித்து கொண்டாடிய தமிழிசை சௌந்தரராஜன்
பட்டாசு வெடித்து கொண்டாடிய தமிழிசை சௌந்தரராஜன் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

சென்னை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தற்போது வரை 216 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 56 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், பாஜக ஆதரவாளர்கள் பல இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றி வாய்ப்பை கொண்டாடி வருகின்றனர். அதேபோல, வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 5,57,451 வாக்குகள் பெற்று, 3,68,319 வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஐ சத்தியன் மொகேரியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருப்பதால், தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

சரித்திர பதிவேடு வெற்றி

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், '' இரண்டு மாநில மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் (மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட்). இதில் பெரிய மாநிலமான, பலம் பொருந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கவிருக்கிறது என்பதில் பெருமை கொள்கிறோம். மகாராஷ்டிரா மாநிலத்தின் வெற்றி சரித்திர பதிவேடு வெற்றி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.

தொடர்ந்து பேசியவர், மாநிலத்தில் டபுள் என்ஜின் ஆட்சி (மாநிலத்திலும், மத்தியிலும் ஒரே கட்சி ஆட்சி) இருந்தால் எவ்வாறு இருக்கும் என்பதை மறுபடியும் உறுதி செய்கிறோம். பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் ஏறக்குறைய பல்வேறு திட்டங்களை பாஜக செயல்படுத்தி வருகிறது. பாஜகவின் இலவச திட்டங்களாக இருந்தாலும், அது வாழ்வாதாரத்தை பெருக்கின்ற இலவச திட்டங்களாக இருக்கிறது என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: லட்டு விவகாரம்: ஏ.ஆர் நிறுவனத்தில் விசாரணைக்காக வந்திறங்கிய திருப்பதி போலீசார்!

காங்கிரஸ் கூட்டணி தோல்வி

ராகுல் காந்தியின் பிரச்சாரமும், இந்தியா கூட்டணியின் பிரச்சாரமும் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது. மகாராஷ்டிராவின் வெற்றி, ஒட்டுமொத்த பாரத தேசமும் பாஜகவுக்கு ஆதரவு தருகிறது என்பதின் குறியீடாக நாங்கள் பார்க்கிறோம். ஜார்கண்டை பொருத்தவரை, அங்கே உள்ள மக்களும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகப்படியான வாக்குகள் கொடுத்துள்ளனர். வயநாட்டில் பிரியங்கா காந்தி வேண்டுமானால் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால், காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்துள்ளது.

வயநாடு மக்களை ராகுல் காந்தி ஏமாற்றியும், அந்த மக்கள் மீண்டும் காங்கிரசுக்கு வாக்களித்துள்ளார்கள். எல்லா மாநிலங்களிலும் பாஜக மீது நம்பிக்கை வைத்து பிரதமர் திட்டங்கள் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளார்கள். அந்த நம்பிக்கையை தமிழக மக்கள் பெற வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. 2026 இல் அந்த நம்பிக்கையை முன்வைத்து எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

மத்திய, மாநிலத்தில் ஒரே ஆட்சியாக இருந்தால் அந்த மாநிலங்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை மகாராஷ்டிரா மாநிலம் நிரூபித்துள்ளது. தமிழ்நாட்டில் 40 பேர் சென்று நாடாளுமன்றத்தில் கத்திக்கொண்டே இருக்கலாம் தவிர வேறு எதுவும் பண்ண முடியாது. மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான மோதல் போக்கு தமிழ்நாடு மக்களுக்கு பலன் அளிக்காது.

இன்றைய நிலைமையில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், வழக்காடும் நீதிமன்றம் ஆகியவற்றில் கத்தி குத்துகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 2026 இல் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்கு பாஜக காரணமாக இருக்கும் என்பதை அழுத்தமாக கூறுகிறேன். தமிழ்நாட்டில் 2026 ஆட்சியில் பாஜக பங்கு பெறும்'' என இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.