ETV Bharat / state

கள்ளக்குறிச்சிக்கு விரைந்த விஜய்... பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்! - vijay in kallakurichi - VIJAY IN KALLAKURICHI

vijay: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய் (Image Credits -ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 7:09 PM IST

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று மாலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

முன்னதாக, கள்ளச்சாராய மரண சம்பவம் குறித்து விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தினுடைய எக்ஸ் பக்கத்தில், ' கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்' என பதிவிடப்பட்டிருந்தது.

விஜய்யின் இந்த பதிவு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இந்த சூழலில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் கள்ளக்குறிச்சிக்கு வந்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். தற்போது விஜய் கள்ளக்குறிச்சிக்கு வந்து, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் ஒரே இடத்தில் தகனம்... கண்ணீரில் மூழ்கிய கள்ளக்குறிச்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.