ETV Bharat / state

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் பணியிட மாற்றம்! - TN school education directors - TN SCHOOL EDUCATION DIRECTORS

Tamil Nadu School Education Department: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் பதவி உயர்வோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வி இயக்ககம்
பள்ளிக்கல்வி இயக்ககம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 11:48 AM IST

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் இயக்குனர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அரசு தேர்வு துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வந்த நரேஷ் இயக்குனராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு தொடக்க கல்வித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை இயக்குனராக பணியாற்றிய அறிவொளி சமீபத்தில் ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து தொடக்க கல்வித்துறை இயக்குனராக இருந்த கண்ணப்பன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். தேர்வு துறை இயக்குனராக இருந்த சேதுராம வர்மா தொடக்க கல்வித்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அரசு செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், '' தொடக்க கல்வித்துறை இயக்குனர் சேதுராம வர்மா ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுகிறார். அரசு தேர்வு துறை இணை இயக்குனர் நரேஷ் பதவி உயர்வு அளிக்கப்பட்டு தொடக்கக் கல்வித் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இயக்குனர் லதா அரசு தேர்வு துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமா மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக நியமனம் செய்யப்படுகிறார் என தெரிவித்துள்ளார். அரசு உத்தரவினை தொடர்ந்து இயக்குனர்கள் புதிய பணியிடத்தில் பதவியேற்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு! - யூனிட்டுக்கு எவ்வளவு அதிகம் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.