கோயம்புத்தூர்: கோவை பிற்படுத்தபட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் சொ. ஜோ அருண் மற்றும் ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜோ அருண் கூறுகையில், “அரசு அலுவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து சிறுபான்மை மக்களுக்காக இருக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். நல திட்டங்கள் அனைத்தும் சிறுபான்மை மக்களை சென்றடைவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் கல்லறை தோட்டம், பள்ளிவாசல், பள்ளி, கல்லூரிகளின் அனுமதி, சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவையில் இருக்கும் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து தீர்வு காணப்பட்டது.
இதையும் படிங்க: "என் மகன் இதய நோயாளி; அவனுக்கு எதுவும் ஆகக்கூடாது" - மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞரின் தாயார் உருக்கம்!
எந்த மாநிலமும் சிறுபான்மையின மக்களுக்காக செய்யாத நல திட்டங்களை முதலமைச்சர் செய்து வருகிறார். கிறிஸ்தவர்களுக்கான கல்லறைத் தோட்டம், இஸ்லாமியர்களுக்கான கபர்ஸ்தான் ஆகியவற்றிற்கான இடம் தொடர்பாக பிரதான முடிவுகள் எடுக்கபட உள்ளது. கல்லறை தோட்டம் அமைப்பதற்கான இடங்களில் சில தடங்கல்கள் உள்ளது. அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறோம். அவை விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கபட உள்ளது.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் ஒரு கண்காணிப்பு அமைப்பு. இதுவரை 300-க்கும் மேற்பட்ட மனுக்களில் 200க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆணையத்திற்கென்று நிதி ஒதுக்கப்படுவதில்லை. சிறுபான்மையினர் நல இயக்கத்திற்கு தான் நிதி ஒதுக்கப்படுகிறது. அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கும் மற்றும் பரிந்துரைகள் வழங்கும் அமைப்புதான் இந்த ஆணையம். சிறுபான்மையினர் நடத்தக் கூடிய பள்ளிகளில் அடிப்படை வசதிகள் அமைத்து தருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்