சென்னை: தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 6) வெளியாகின. இதில், மாநிலம் முழுவதும் 94.56% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின்படி 7,19,196 மாணவ மாணவியர்கள் என மொத்தம் 94.56% தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில் மாணவியர்கள் 3,93,890 பேர் என 96.44% மற்றும் மாணவர்கள் 3,25,305 பேர் என 92.37% தேர்ச்சியடைந்துள்ளனர். பொதுத்தேர்வு எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் (100%) தேர்ச்சி அடைந்துள்ளார். மாணவர்களைவிட 4.07 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம் குறித்த விபரங்கள் பின்வருமாறு:-
வ.எண் | பாடப்பிரிவுகள் | தேர்ச்சி விகிதம் |
---|---|---|
1. | அறிவியல் பாடப் பிரிவுகள் | 96.35% |
2. | வணிகவியல் பாடப் பிரிவுகள் | 92.46% |
3. | கலைப் பிரிவுகள் | 85.67% |
4. | தொழிற்பாடப் பிரிவுகள் | 85.85% |
முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம் விபரம் பின்வருமாறு:-
வ.எண் | பாடப்பிரிவுகள் | தேர்ச்சி விகிதம் |
---|---|---|
1. | இயற்பியல் | 98.48% |
2. | வேதியியல் | 99.14% |
3. | உயிரியியல் | 99.35% |
4. | கணிதம் | 98.57% |
5. | தாவரவியல் | 98.86% |
6. | விலங்கியல் | 99.04% |
7. | கணினி அறிவியல் | 99.80% |
8. | வணிகவியல் | 97.77% |
9. | கணக்குப் பதிவியல் | 96.61% |
முக்கிய பாடங்களில் 100% மதிப்பெண்கள் (சென்டம்) பெற்ற மாணவ மாணவியர்கள் குறித்த விபரம் பின்வருமாறு:-
வ.எண் | பாடப்பிரிவுகள் | தேர்ச்சி விகிதம் |
---|---|---|
1. | தமிழ் | 35 |
2. | ஆங்கிலம் | 7 |
3. | இயற்பியல் | 633 |
4. | வேதியியல் | 471 |
5. | உயிரியல் | 652 |
6. | கணிதம் | 2587 |
7. | தாவரவியல் | 90 |
8. | விலங்கியல் | 382 |
9. | கணினி அறிவியல் | 6996 |
10. | வணிகவியல் | 6142 |
11. | கணக்குப்பதிவியல் | 1647 |
12. | பொருளியல் | 3299 |
13. | கணினி பயன்பாடுகள் | 2251 |
14. | வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் | 210 |
இதில், 5603 மாற்றுத்திறனாளி மாணாக்கர்கள் தேர்வு எழுதிய நிலையில், 5161 பேர் (92.11%) தேர்ச்சியடைந்துள்ளனர். இதேபோல, 125 சிறைவாசிகள் பொதுத்தேர்வு எழுதிய நிலையில், 115 பேர் (92%) தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கை 26,352 ஆகும்.
இதையும் படிங்க: வெளியானது +2 தேர்வு முடிவு: தேர்ச்சி விழுக்காடு விபரங்கள்! - TN 12th Results 2024