சென்னை: தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று (ஜன.27) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் ஐஏஎஸ் வெளியிட்ட உத்தரவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் நியமனம்
- சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவி ஐஏஎஸ் நியமனம்
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தட்பகராஜ் ஐஏஎஸ் நியமனம்
- தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் ஐஏஎஸ் நியமனம். இதற்கு முன்பு மாவட்ட ஆட்சியராக இருந்த துரை ரவிச்சந்திரன் உயர் கல்வித்துறை இணை செயலராக மாற்றம்
- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் ஐஏஎஸ் நியமனம். இவர் தமிழ்நாடு மாநகராட்சி நிர்வாக இயக்குனராக இருந்தவர்.
- வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமி ஐஏஎஸ் நியமனம். இவர் வணிக வரிகள் இணை ஆணையர் (நிர்வாகம்) ஆக இருந்தவர்.
- வேளாண்துறை இயக்குநராக பி.முருகேஷ் ஐஏஎஸ் நியமனம்
- தோட்டக்கலைத்துறை இயக்குநராக பி.குமாரவேல் பாண்டியன் ஐஏஎஸ் நியமனம்
- அரசு துணைச் செயலாளராக டி.ரவிச்சந்திரன் ஐஏஎஸ் நியமனம்
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக எம்.லட்சுமி ஐஏஎஸ் நியமனம்
- வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக எஸ்.நடராஜன் ஐஏஎஸ் நியமனம்
- வேளாண் வணிகத்துறை முதன்மைச்செயலாளராக ஜி.பிரகாஷ் ஐஏஎஸ் நியமனம்
இதையும் படிங்க: கிராமிய கலைகளை வளர்க்க அரசு செய்ய வேண்டியது என்ன? பத்ம ஸ்ரீ பத்திரப்பன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டி!