சென்னை: கடந்த 2023 டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களும் அதித கனமழையால கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதில் ஏராளமான பொதுமக்கள், தங்களது உடைமைகள் மற்றும் வீடுகளை இழந்து தவித்தனர். அவ்வாறு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த வீடுகளை பழுது பார்பதற்கு 2 லட்சம் ரூபாய் வரையும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு 4 லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாக சேதமடைந்த 955 வீடுகளுக்கு பழுது நீக்கம் செய்யவும் மற்றும் புதிதாக கட்டுவதற்கு சுமார் 24.22 கோடி ரூபாய் வழங்கி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
அதேபோல், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.21.62 கோடியும் என மொத்தம் ரூபாய் 45.84 கோடியை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கல்பாக்கத்தில் ஈனுலை.. பிரதமர் மோடி விழாவை முதல்வர் புறக்கணித்தது ஏன்.. அறிவியலா? அரசியலா?