சென்னை: நாடு முழுவதும் நேற்று வெகு விமரிசையாக தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பட்டாசு வெடித்து விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பாக தமிழகத்திலுள்ள 368 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் பணிபுரியும் 8,000க்கும் மேற்பட்ட அலுவலகர்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல், சென்னையில் மட்டும் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் பணிபுரியம் 800க்கும் மேற்பட்ட அலுவலகர்கள் நேற்று முழுவதும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சென்னையில் 21 இடங்களில் தீயணைப்பு ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தீபாவளியைத் தண்ணீரில் மிதந்து, கண்ணீரில் களித்த மக்கள்!
தமிழ்நாடு முழுவதும் கொண்டாடபட்ட தீபாவளி விழாவில் கொண்டாட்டத்தில் பட்டாசு மற்றும் ராக்கெட் விடுதலில் 150 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 48 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ராக்கெட் மட்டும் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்துகளில் 544 பேர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உயிர் இழந்துள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் கடந்த ஆண்டு தமிழகத்தில் தீபாவளி திருநாளன்று பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் 254 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 102 தீ விபத்துகள் பட்டாசு மற்றும் ராக்கெட் வெடித்ததில் நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்