ETV Bharat / state

அரசு ஊழியர்கள் பிரச்னை: வெற்று அறிக்கை நம்பிக்கை தராது என அரசை தாக்கிய சங்கம்!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து நேரடியாக குறிப்பிடாமல் வெற்று அறிக்கை வெளியிடுவது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தாது என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தலைமைச் செயலகம், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்க தலைவர் கு.வெங்கடேசன்
தலைமைச் செயலகம், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்க தலைவர் கு.வெங்கடேசன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2024, 1:07 PM IST

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் ஆகியவை மீதான அரசின் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என தலைமைச் செயலகச் சங்கம் வலியறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்க தலைவர் கு.வெங்கடேசன், இணை செயலாளர் லெனின் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “நவம்பர் 8ஆம் தேதி நடந்த, பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அதில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை, நிதி சாராத கோரிக்கைகளை மட்டுமே தேர்தலுக்குள் நிறைவேற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் பரவியது.

இது தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் இடையே பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது கானல் நீராகப் போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2021-ஆம் ஆண்டில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், கொரோனா பேரிடர், முந்தைய ஆட்சியாளர்களால் விட்டுச் சென்ற கடுமையான நிதி நெருக்கடி, ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டினையும் சமாளித்து நிதி மேலாண்மையினை மேற்கொள்வதாக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: பழைய ஓய்வூதியத் திட்டம்; தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதலமைச்சருக்கு கடிதம்!

இதில், முன்னான் முதலமைச்சர் கருணாநிதியால் நடைமுறைப்படுத்தப்பட்ட சரண் விடுப்பு உரிமையானது காலவரையின்றி முடக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு சரண் விடுப்பு சலுகைதான் பெரிய நிவாரணமாக இருந்தது. இது இனிமேல் ஒரு போதும் வழங்க இயலாது என்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. அரசின் நடவடிக்கைகளும் அதைத்தான் உணர்த்துகின்றன.

காலிப் பணியிடங்கள்: காலிப் பணியிடங்களை நிரப்புவதிலும் மெத்தனமானப் போக்கு மேலோங்கி நிற்கிறது காலிப் பணியிடங்கள் தனியார் முகமைகள் மூலமாக பல்வேறு வடிவங்களில் நிரப்பப்படுகின்றன. 4 இலட்சத்திற்கு மேல் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், பணியாளர்களை தனியார் முகமை மூலமாக குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தும் போக்கு உள்ளது. இது சமூக நீதிக்கும், இந்திய அரசியலமைப்பினால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கும் முற்றிலும் எதிரானது.

தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை "தேர்தல் கால வாக்குறுதிகள் 100 விழுக்காடு நிறைவேற்றப்படும்" என்ற உத்தரவாதத்தினை அளித்துள்ளார. ஆனால், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களைப் பொறுத்தவரை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாடு அரசின் சார்பாக வெற்று அறிக்கைகள் வருவது, அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கையினை ஏற்படுத்தாது.

மேலும், நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும்போது, இந்திய அரசியலைமைப்பும், ஜனநாயகமும் வகுத்துள்ள நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளும் நிலைக்கு அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தள்ளப்படுகின்றனர்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை, குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துதல், காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு காலிப் பணியிடங்களை நிரப்புதல் ஆகியவற்றின் மீதான கொள்கை முடிவினை அறிவிக்க வேண்டும்,” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.