ETV Bharat / state

நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! - SELVARAJ MP PASSED AWAY - SELVARAJ MP PASSED AWAY

M.K.Stalin Condolence To Selvaraj MP: நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Photos of late Nagai MP Selvaraj and Chief Minister M.K.Stalin
மறைந்த நாகை எம்பி செல்வராஜ் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 3:52 PM IST

சென்னை: நாகை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் (67) உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் காலமானார். இந்த நிலையில், நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினருமான செல்வராஜ் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 1975-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த செல்வராஜ் சுமார் அரை நூற்றாண்டு காலம் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தவர் ஆவார்.

செல்வராஜ் நான்கு முறை நாகை மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். டெல்டா மாவட்டங்களுக்கு ரயில்வே திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் பெருங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை அவர் முன்னெடுத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜின் மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாகப்பட்டினம் எம்பி செல்வராஜ் மறைவு..இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.