ETV Bharat / state

கோவையில் பயமறியாது படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள்! - Footboard travel in bus

Kovai Suburban Area Bus Shortage Issue: கோவை புறநகரப் பகுதிகளில் பேருந்துகள் பற்றாக்குறை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தனியார் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Suburban Area Bus Shortage Issue
கோவை புறநகர் பகுதி பேருந்து பற்றாக்குறை பிரச்சினை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 7, 2024, 5:24 PM IST

கோவை புறநகர் பகுதி பேருந்து பற்றாக்குறை பிரச்சினை

கோயம்புத்தூர்: கோவை புறநகரப் பகுதியான அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளுக்குச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர், பெரும்பாலும் பொது போக்குவரத்தையே நம்பி உள்ளனர்.

இந்த நிலையில், அன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே நகரப் பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, காலை மற்றும் மாலை வேலைகளில் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், விபரீதத்தை உணராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

அன்னூர் போலீசார் அவ்வப்போது பேருந்துகளைத் தடுத்து நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவது, படிகளில் தொங்கியபடி பயணிக்க மாட்டோம் என மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் செய்வது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூலம் பேருந்து ஊழியர்களுக்கு அபராதம் விதிப்பது, வழக்குப் பதிவு செய்வது என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இருந்தாலும், பேருந்துகள் பற்றாக்குறை காரணமாக, மாணவர்கள் அதிவேகமாகச் செல்லும் தனியார் பேருந்துகளில் தொங்கியபடி பயணிப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதற்கு முன்பாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து காலை மற்றும் மாலை வேலைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பலகை உடைந்து விபத்து - உயிர் தப்பிய பயணி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.