ETV Bharat / state

விழுப்புரம் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா திடீர் கோளாறு..காரணம் என்ன? - Lok Sabha Election 2024

Villupuram Lok Sabha Constituency: விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட (Strong Room) ஸ்ட்ராங் ரூமைக் கண்காணிக்கும் இரண்டு கேமராக்கள் இன்று காலை அரைமணி நேரம் இயங்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.

விழுப்புரம் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா புகைப்படம்
விழுப்புரம் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா புகைப்படம் (Credit: ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 12:49 PM IST

விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரை மணி நேரம் அங்குள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் மின்னழுத்தம் காரணமாக வேலை செய்யவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

இதனையடுத்து இன்று(மே.8) காலை மீண்டும் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் திண்டிவனம் சட்டமன்றத் தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் கேமராக்கள் இயங்கவில்லை எனத் தகவல் வெளியானது.

காலை முதல் இடி மின்னல் காரணமாக, கேமராக்கள் இயங்காமல் போய் இருக்கலாம் எனப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், உரிய விளக்கங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தென்காசி அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. தனியார் பள்ளி நிர்வாகம் மீது விவசாயிகள் புகார் - Tenkasi Land ENCROACHMENT Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.