சென்னை: பிரியாணி உணவை சில்வர் கவரில் பார்சல் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் பிரியாணி கடைக்கு சென்று உணவு பார்சல் செய்து வந்து அந்த உணவை திறந்து சாப்பிடும் போது சில்வர் கவரை வைத்து உணவு பொட்டலம் கட்டியதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த சம்பவம் எங்கு நடைபெற்றாலும் உடனடியாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் படி பார்சல் வாங்கி செல்லும் உணவுகள் பிளாஸ்டிக் மற்றும் சில்வர் கவரில் பயன்படுத்தி பார்சலை வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பிரியாணி கடைகளில் உடனடியாக பிரியாணியை விற்பனை செய்துவிட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்.. திருப்பூர் தனியார் பள்ளிக்கு இரண்டு நாட்கள் விடுமுறை!
ஏற்கனவே உணவு பாதுகாப்புத் துறை மூலம் நடத்தப்பட்ட சோதனையில் பிளாஸ்டிக் பொருட்கள் உணவு பாதுகாப்புத் துறையினர் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே அதனையும் மீறி, மீண்டும் இது போன்ற சில்வர் கவர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி உணவு வகைகளை பார்சல் செய்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், தொடர்ந்து இது போன்ற நடவடிக்கை ஈடுபட்டால் கடை உரிமைத்தை ரத்து செய்து சீல் வைக்கப்படும் எனவும் உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.