ETV Bharat / state

சாலையோரக் கடைகளை அகற்றும்போது பெண் உயிரிழப்பு.. வியாபாரிகள் போராட்டம்! - Chennai Street vendor death issue - CHENNAI STREET VENDOR DEATH ISSUE

Street vendor death issue: சென்னை மாநகராட்சியில் நகர வியாபாரக் குழு நடைமுறையில் இருந்தும் அதன் ஒப்புதலைப் பெறாமல் தன்னிச்சையாக மாநகராட்சி செயல்பட்டு, சாலையோர வியாபாரிகளை அகற்றுவதாக குற்றம் சாட்டியுள்ள தெருவோர வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தெருவோர வியாபாரிகள் சங்க கூட்டமைப்பினர்
தெருவோர வியாபாரிகள் சங்க கூட்டமைப்பினர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 11:21 AM IST

சென்னை: மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் இணைந்து கடந்த வியாழக்கிழமை காலை என்.எஸ்.சி போஸ் சாலை பூக்கடை பகுதியில் சட்டவிரோத அகற்றுதல் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், கடைகளை அகற்றுதலின் போது, தன்னுடைய வியாபாரப் பொருட்களை பாதுகாக்கும் முயற்சியில் கீழே விழுந்த சாலையோரப் பெண் வியாபாரி கிருஷ்ணவேணி உயிரிழந்தார்.

தெருவோர வியாபாரிகள் சங்க கூட்டமைப்பினர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதன் காரணமாக மற்ற சாலையோர வியாபாரிகள் நேற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வு நடைபெறும் வளாகத்தில் ஒன்று கூடி போலீசாரிடம் நீதி கேட்டனர். அப்போது, ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த சாலையோர பெண் வியாபாரி, “நான் 14 வயதில் இருந்து இங்கு கடை நடத்தி வருகிறேன். தலைமுறை தலைமுறையாக இங்கு பிழைப்பு நடத்தி வரும் எங்களை இங்கிருந்து காலி செய்ய கூறுகின்றனர்.

எங்கள் உயிரே போனாலும் அந்த இடத்தை விட்டு போக மாட்டோம். மாநகராட்சி அதிகாரி கார்த்திக் என்னை தள்ளிவிட்டு, நான் விற்பனைக்கு வைத்திருந்த பழங்களை எடுத்துச்சென்று விட்டார். நீங்கள் காலி செய்யவில்லை என்றால், உங்களை துரத்தி துரத்தி அடிப்போம், நாங்கள் உழைத்து தான் சாப்பிடுகிறோம். அதற்கும் வழியில்லாமல் செய்கின்றனர். தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆதங்கத்துடன் கூறினார்.

அப்போது தமிழ்நாடு தெருவோர வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வீ.மகேஸ்வரன் மற்றும் நகர வியாபாரக் குழு உறுப்பினர் கண்ணன் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். இது தொடர்பாக வீ.மகேஸ்வரன் கூறுகையில், “முறையாக அடையாள அட்டை வாங்கிய தெருவோர வியாபாரிகளை எந்த காரணத்தைக் கொண்டும் தன்னிச்சையாக மாநகராட்சி அகற்றக்கூடாது. ஆனால், நேற்று (ஜூன் 13) அவ்வாறு நடைபெற்றது.

நகர வியாபாரச் குழுவில் எந்த கலந்துரையாடலுமின்றி மாநகராட்சி அதிகாரி கார்த்திக் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோரக் கடைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோயம்பேட்டில் 2022ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி இதே போல ஒரு சம்பவம் நடைபெற்றது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்த சம்பவத்திற்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை.

இப்பொழுது அதேபோல இன்னொரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. சாலையோர வியாபாரிகளை எந்த காரணத்தைக் கொண்டும் கடைகளை சட்ட விரோதமாக அகற்றக் கூடாது. இனிமேல் இது போன்று நடைபெறக்கூடாது. மேலும், உயிரிழந்த ஏழை பெண் வியாபாரியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். மாநகராட்சி அதிகாரி கார்த்திக் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.

பின்னர் பேசிய நகர வியாபாரக் குழு உறுப்பினர் கண்ணன், “நகர வியாபாரக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் 15 பேர் சேர்ந்து கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கினால் மட்டுமே, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அந்த குழுவில் எந்த வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை” என்றார்.

இதையும் படிங்க: விஷவாயு தாக்கி நான்கு நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - ஆளுநரிடம் புதுச்சேரி மக்கள் வேதனை - Puducherry Poisonous Gas Attack

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.