விருதுநகர்: ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர், அரசுப் பேருந்தில் பயணம் செய்த போது 14 ரூபாய் பேருந்து கட்டணத்திற்கு 20 ரூபாய் கொடுத்துள்ளார். பேருந்து கட்டணம் போக மீதி 6 ரூபாயை நடத்துநர் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து கேட்டதற்கு நடத்துநர் தகாத வார்த்தையால் பொன்பாண்டியனை பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், இது குறித்து பொன்பாண்டியன் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி சக்கரவர்த்தி, 6 ரூபாயை திரும்பத் தர வேண்டும் எனவும், மன உளைச்சலுக்காக 10,000 ரூபாயும், வழக்குச் செலவுக்கு 5,000 ரூபாய் என மொத்தம் 15 ஆயிரத்து 6 ரூபாயை கொடுக்க வேண்டும் எனவும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆன்லைன் கடன் செயலியில் மிரட்டல்.. கோவில்பட்டி பெண் தற்கொலை முயற்சி! - Online Loan App Scam Issue