ETV Bharat / state

18 மீனவர்களுடன் 3 படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படை! ராமேஸ்வரம் மீனவர்களிடையே பதற்றம்.. - 18 Rameswaram Fishermen Arrested - 18 RAMESWARAM FISHERMEN ARRESTED

Rameswaram Fishermen Arrested: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 மீனவர்களுடன் 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் கைது தொடர்பான கோப்புப்படம்
மீனவர்கள் கைது தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 23, 2024, 8:02 AM IST

ராமநாதபுரம்: தமிழ்நாட்டு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது, எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர் கதையாகி வருகின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று (ஜூன் 22) தமிழக மீன்வளத்துறையினரிடம் உரிய அனுமதிச் சீட்டு பெற்று, மீன்பிடித் தொழிலுக்காக 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர்.

இந்த சூழலில், இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, கச்சத்தீவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி மூன்று விசைப்படகுகள் மற்றும் அந்த படகுகளில் இருந்த 18 மீனவர்களை சிறை பிடித்ததாகத் தகவல்கள் வெளிவந்தன.

மேலும் அதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில், 18 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக, நடப்பாண்டில் சுமார் 178 இந்திய மீனவர்கள் மற்றும் 23 இந்திய படகுகளை சிறை பிடித்து நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக இலங்கை கடற்படை கடந்த ஏப்ரல் மாதம் தகவல் ஒன்றை வெளியிட்டது.

அந்தவகையில், தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர், புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள், கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி, இரண்டு விசைப்படகுகளில், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் நள்ளிரவில், நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, இலங்கை கடற்படை ரோந்து கப்பல் வந்து, தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் மடக்கிப் பிடித்தனர். அதோடு இவர்கள் எல்லை தாண்டி, இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாகக் கூறி, இரண்டு படகுகள், மீன்பிடி வலைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

அதேபோல, கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 21 மீனவர்களை கைது செய்து, அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து, கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேருக்கு மார்ச் 27 வரை நீதிமன்றக் காவல் வழங்கி காங்கேசன்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பயிர் காப்பீடு முதல் காளான் வளர்ப்பு வரை.. வேளாண்மை– உழவர் நலத்துறையில் அசத்தும் 30 புதிய அறிவிப்புகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.