ETV Bharat / state

போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயற்சி? தம்பதியினரைக் கைது செய்த போலீசார் - நடந்தது என்ன? - Chennai airport

Fake Passport Issue: சென்னையிலிருந்து போலி பாஸ்போர்ட்டில் இலங்கைக்குச் செல்ல முயன்றதாகக் கூறி, இலங்கையைச் சேர்ந்த தம்பதியினரைக் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Fake Passport Issue
Fake Passport Issue
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 3:04 PM IST

சென்னை: சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் (FitsAir airline) என்ற தனியார் பயணிகள் விமானம், வழக்கம்போல் நேற்று புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும், ராமச்சந்திரன்(45), ஹனீஷா(40) தம்பதியினர் இருவரும், அந்த விமானத்தில் இலங்கை செல்வதற்கு வந்துள்ளனர்.

அப்போது, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் இருவரின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களைப் பரிசோதித்த போது இருவரும் இந்திய பாஸ்போர்ட்கள் வைத்திருந்துள்ளனர். ஆனால் இருவரும் இலங்கைத் தமிழர்கள் போல் பேசியதாகக் கூறப்படுகிறது. அதனால், சந்தேகமடைந்த குடியுரிமை அதிகாரிகள் இருவரையும் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில், இருவரும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் எனவும், பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வருவதாகவும், இவர்களுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருப்பதாகவும், அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை ஏற்க மறுத்த குடியுரிமை அதிகாரிகள், ஏஜெண்டுகள் மூலம் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து போலி இந்திய பாஸ்போர்ட் வாங்கி வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இருவரின் இலங்கை பயணத்தையும் ரத்து செய்த அதிகாரிகள், இருவரையும் சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலகத்தில் வைத்து, கியூ பிராஞ்ச் அதிகாரிகள், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் நீண்ட நேரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும், போலி ஆவணங்கள் மூலம் போலியான இந்திய பாஸ்போர்ட் வாங்கி, அதன் மூலம் இலங்கைக்குப் பயணம் செய்ய முயன்றதாகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த குடியுரிமை அதிகாரிகள் நேற்று இரவு கணவன் மனைவி இருவரையும் கைது செய்தனர்.

அதோடு, சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்த போலீசார் கணவன் மனைவி இருவரையும், மேல் நடவடிக்கைக்காகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இரவில் வாக்காளர் பட்டியலுடன் சுற்றித் திரிந்த இருவர்.. சுற்றி வளைத்த திமுகவினர்! - Election Rules Break Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.