ETV Bharat / state

கடைகளின் மேற்கூரையை பிரித்து திருட்டு.. மேற்கூரையிலே வைத்து கைது செய்த தனிப்படை! - serial theft punching holes in shop - SERIAL THEFT PUNCHING HOLES IN SHOP

Serial theft punching holes in shop in Chennai: சென்னையில் கடந்த சில மாதங்களாக தரமணி, வேளச்சேரி, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடைகளின் மேற்கூரை ஓட்டை உடைத்து தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த காசி என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது புகைப்படம்
தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 9:04 PM IST

Updated : Jun 11, 2024, 9:52 PM IST

சென்னை: சென்னை தரமணி, வேளச்சேரி, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடைகளின் மேற்கூரை ஓட்டையை உடைத்து தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக காவல் நிலையங்களில் புகார்கள் வந்துள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில், தரமணி சரக உதவி ஆணையாளர் கண்ணன் தலைமையில், தரமணி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆதவன் பாலாஜி, தலைமைக் காவலர்கள் மகேஷ், உதயகுமார், கர்ணா, ஹரி, கோபி மற்றும் அடையாறு மாவட்ட சரக சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயபாலாஜி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது வீடியோ (Credit - ETV Bharat Tamil Nadu)

மேலும், தனிப்படை போலீசார் கொள்ளைச் சம்பவம் அரங்கேறிய பகுதியின் அருகில் உள்ள பல்வேறு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, பழைய குற்றவாளி சென்னை அசோக் நகரைச் சேர்ந்த காசி என்பது தெரிய வந்துள்ளது. சுமார் 125 சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசார், காசி பெருங்குடி ரயில் நிலையத்தின் மேற்கூரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மகேஷ், உதயகுமார், கர்ணா உள்ளிட்ட தனிப்படை போலீசார், பெருங்குடி ரயில் நிலைய மேற்கூரைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு காசி பதுங்கி இருந்துள்ளார். பின்னர் போலீசாரை பார்த்ததும் தப்பித்து ஓட முயன்ற போது, தனிப்படை போலீசார் ரயில் நிலைய மேற்கூரையில் மேலே மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பின்னர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மேலும், தனி ஒரு ஆளாக தொடர்ந்து கடைகளின் மேற்கூரையை உடைத்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி வந்தது தெரிய வந்துள்ளது.

பகலில் எங்கும் வெளியில் வராமல், பெருங்குடி ரயில்வே நிலையம் மேற்கூரையின் உச்சியில் படுத்து உறங்கிவிட்டு, இரவு 12 மணிக்கு மேல் மட்டும் வெளியே வந்து கடைகளின் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி திருடும் வழக்கத்தை கடைபிடித்து வருவதாகவும், கடைகளின் மேற்கூரையை உடைத்து திருடும் பணத்தை வைத்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், காசி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திறமையாக செயல்பட்டு திருட்டு வழக்கில் தொடர்புடைய இளைஞரை கைது செய்த தரமணி சரக உதவி ஆணையாளர் கண்ணன் தலைமையில், தரமணி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆதவன் பாலாஜி, தலைமைக் காவலர்கள் மகேஷ், உதயகுமார், கர்ணா, ஹரி, கோபி மற்றும் அடையாறு மாவட்ட சரக சைபர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயபாலாஜி ஆகியோர் கொண்ட தனிப்படையினரை சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நெல்லையில் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக இந்து மக்கள் கட்சி நிர்வாகி உடையார் கைது! - Hindu Makkal Katchi

Last Updated : Jun 11, 2024, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.