சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள ரயில் பாதை தொகுப்பில் மாற்றங்கள் மற்றும் மேம்பாட்டு பணிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 18 வரை நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (வண்டி எண்: 20691) ஜூலை 23 முதல் ஜூலை 31 வரையும், நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (20692) ஜூலை 22 முதல் ஜூலை 31 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
Change in the pattern of #Train Services due to Re-modelling of #Tambaram Yard for Engineering and Signalling upgradation / improvement works in #Chennai Division
— Southern Railway (@GMSRailway) July 15, 2024
Passengers are requested to take note and plan your #travel#SouthernRailway pic.twitter.com/QfKPUhxpO6
ஜூலை 21 அன்று மாலை 3 மணிக்கு பிகானிரிலிருந்து புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (வண்டி எண்: 22632) சென்னை எழும்பூர் வழியாக வருவதற்கு பதிலாக அரக்கோணம் செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும். சென்னை பயணிகள் வசதிக்காக பெரம்பூரில் நிறுத்தம் வழங்கப்படுகிறது.
ஜூலை 24 மற்றும் 31 ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் (மண்டபம்) இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட வேண்டிய பனாரஸ் விரைவு ரயில் (22535), ஜூலை 28 அன்று மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய அயோத்தியா கண்ட்டோன்மெண்ட் ஷிரத்தா சேது விரைவு ரயில் (22613) ஆகியவை சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக செங்கல்பட்டு, அரக்கோணம் வழியாக இயக்கப்படும்.
சென்னை பயணிகள் வசதிக்காக பெரம்பூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கப்படுகிறது. ஜூலை 23 முதல் 31 வரை காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (12606) மற்றும் அதன் இணை ரயிலான சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவை சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஜூலை 22, 24, 27, 28, 29, 31 ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து மாலை 04.15 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் (20684), ஜூலை 24, 25, 28, 30 ஆகிய நாட்களில் தாம்பரத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் (20683) தாம்பரம் - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஜூலை 24, 28, 29, 31 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட வேண்டிய நாகர்கோவில் விரைவு ரயில் (22657) சென்னை எழும்பூரில் இருந்தும், ஜூலை 22, 23, 25, 29, 30 ஆகிய நாட்களில் மாலை 04.30 மணிக்கு புறப்பட வேண்டிய தாம்பரம் விரைவு ரயில் (22658) சென்னை எழும்பூர் வரையும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரயில் உணவுகளில் சுகாதார பிரச்சினையா? மத்திய ரயில்வே அதிரடி உத்தரவு! - Rail Madad app